இஸ்லாமியராக இருக்கக் கூடிய கிஸ்புல்லா அவர்களுக்கு ஆளுனர் பதவி வழங்கியது தவறு- முன்.பா.உ பா. அரியநேந்திரன் தினப்புயல் ஊடகநிறுவனத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்

28

கேள்வி:- இன்றைய காலகட்டத்திலே சமகால அரசியல் பார்வையிலே இந்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினுடைய இந்றைய நிலைப்பாடு எப்படி இருக்கின்றது.

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய நிலைப்பாடு என்பது எப்பவுமே ஒரே மாதிரியான கொள்கை நிலைப்பாட்டுடனேயே இருக்கின்றது. நீங்கள் சொல்வது போன்று இந்த சமகால அரசியல் என்கின்ற போது இந்த நல்லாட்சி அரசாங்கம் 2015ம் ஆண்டு தை மாதம் 08ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது நான்கு வருடங்கள் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டதற்குப் பிற்பாடு பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது. அதற்கு பின்பு இந்த இரண்டு பெரும்பாண்மைக் கட்சிகளும் இணைந்து ஒரு நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்துவந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்தது.

தொடர்ச்சியாக இந்த அரசியல் நிர்ணயசபை அரசியல் மாற்றம் வடகிழக்கு மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வு தொடர்பாக பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற நேரத்தில் இறுதியாக அக்டோபர் மாதம் 25ம் திகதி என்று நினைக்கின்றேன சடுத்தியாக ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு முன்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்களை பதவியிலிருந்து இறக்கிவிட்டு ரணில் விக்கிரமசிங்கா அவர்களை பதவியிலிருந்து இறங்கிவிட்டு தன்னிச்சையாக மகிந்த ராஜபக்ஷh அவர்களைக் கொண்டு வந்தார். இதில் ஒரு உண்மையொன்று இருக்கின்றது என்னவென்றால் ஒக்டோபர் மாதம் இடம்பெற்றது நவம்பர் மாதம் 07ம் திகதி அரசியல் அமைப்புச் சபை வழிநடத்தல் சபையிலே அங்கிகரிக்கப்பட்ட அந்தத் தீர்மானம் நாடாளுமன்றத்திலே வரயிருக்கின்ற காலத்தில் சரியாக பத்து நாட்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் இடம்பெற்றது அதற்கு பிற்பாடு அந்த 52 நாட்கள் நடைபெற்றது எல்லோருக்கும் தெரிந்த விடயகமாக இருக்கின்றது. அதிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கனிசமான பங்கை சட்டரீதியாக ஜனநாயகத்துக்கு விரோதமாக நடந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. எடுக்கப்பட்டதன் பிற்பாடு இப்பொழுது இருக்கின்ற சமகால அரசியல் என்பது ஜனாதிபதி அவர்கள் ஒரு விதமான போக்குடனும், பிரதமர் இரண்டும் முரண்பட்ட நோக்கிலே இப்பொழுது இந்த அரசியல் போய்க்கொண்டிருக்கின்றது.

அதிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் என்பது இப்பொழுது பிரதமாராக ரணில் விக்கிரமசிங்கா அவர்களை ஆதரித்த தேவைக்காக ஜனாதிபதியாக இருக்கக்கூடிய மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஒரு பழிவாங்கள் நடவடிக்கையை மேற்கொள்கின்றார் என்கின்ற ஒரு கேள்வி தற்பொழுது இந்த சமகால அரசியலில் இருப்பதாகத் தெரிகின்றது.

கேள்வி:- அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையிலே அதனுடைய அங்கத்தவர்கள் குறைவாக இருந்தாலும் யாழ்ப்பாணத்தைப் போன்று அல்ல. காரணம் என்னவென்றால் அங்கே போட்டியிட்டால் தமிழர்கள் தான் கூட வருவார்கள். இங்கு கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையிலே முஸ்லீம்களும் சிங்களவர்களும் வருவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தினுடைய அரசியலில் முஸ்லீம்களினுடைய நில அபகரிப்பு அல்லது அவர்களுடைய சுரண்டல்கள் இவற்றை நீங்கள் இல்லாமல் ஆக்குவதற்கு இந்த சமகால அரசியலிலே கிழக்கு மாகாணத்தினுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களுடைய நகர்வுகள் எப்படியிருக்கின்றது.

பதில்:- உண்மையிலே கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டடில் இங்கு மூவின மக்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசமாக இருக்கின்றது. கூடுதலாக மட்டக்களுப்பு மாவட்டத்தில் மாத்திரம் தான் தமிழ் மக்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். ஏனைய மாவட்டக்களைப் பொறுத்தவரையில் சிங்கள மக்கள் இஸ்லாமிய மக்கள் வாழ்கின்றார்கள். இந்த நில அபகரிப்பு என்பது இரண்டு இனங்களினால் தமிழ் மக்களுடைய நிலங்கள் அபகரிக்கப்படுகின்றது. ஒன்று இஸ்லமிய அரசியல் வாதிகளினால் மற்றும் பௌத்த மத குருமாருகளினால் சிங்கள ஆக்கிரமிப்பின் காரணமாக இந்த நில அபகரிப்பு மட்டக்களப்பு மாவட்டமாக இருந்தாலும் சரி திருகோணமலை மாட்டமாக இருந்தாலும் சரி அம்பாறை மாவட்டமாக இருக்கலாம் இது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலமையாக இருக்கின்றது. இது சம்பந்தமாக பல்வேறுபட்ட நடவடிக்கைகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கின்றது. ஆகவே காணி விவகாரம் தொடர்பாக நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற காலத்தில் கூட இங்கே இருக்கின்ற பட்டியிருப்பு தொகுதியில் இங்கிருக்கின்ற பட்டிப்பழை பிரதேசசெயலக பிரிவில் இருக்கக் கூடிய கெவிலியாமடுவில் அத்துமீறு காணி அபகரிப்புச் செய்தது தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து அதனை நாங்கள் தடுத்திருந்தோம்.

அதற்குப் பிற்பாடு தொடர்ச்சியாக இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதும் 2009 விடுதலைப்புலிகளின் மௌனத்திற்குப் பிற்பாடு மிகவும் மோசமான அளவிலே பல்வேறுபட்ட காணி அபகரிப்புக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதனைத் தடுப்பதற்காக நாங்கள் பேச்சுவார்த்தை ஊடாக அல்லது சட்டரீதியாக எவ்வாறு தடுக்கலாம் என்பதை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.
ஆனாலும் இந்த இனரீதியான ஒரு முரண்பாடு ஒன்று கிழக்கு மாகாணத்தில் ஏற்படக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக இருக்கின்றது. இனரீதியாகப் பார்க்காமல் இஸ்லாமிய மக்களுக்கும் காணி தேவை அவர்களுக்கான இடங்கள் வழங்கப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். ஆனால் அதற்காக தமிழ் மக்கள் வாழுகின்ற தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை அத்துமீறிப் அபகரிப்பதற்கு நாங்கள் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றோம். அந்த நடவடிக்கையினை நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் செய்வதற்கு உறுதியாக இருக்கின்றோம்.

கேள்வி:- ஜனாதிபதியினால் ஒரு அனிதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்று கூறுகின்றீர்கள். இந்த அளுநகர் நியமனத்திலே ஒரு முஸ்லீம் சமூகத்தைச் சார்ந்த கிஸ்புல்லா அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஏன் அவரை நீங்கள் நியமிக்கக் கூடாது இவரினுடைய வருகையினால் அவர் ஏற்கனவே தமிழ் மக்களுடைய காணிகளை அபகரித்து அதிலிருந்த கட்டிடங்களை தகர்த்து அங்கிருந்த கோவில்களை இடித்து அங்கு தன்னுடைய சுப்பர் மாக்கட்டை கட்டியதாக அவரே ஒரு நோர்காணலில் குடுத்திருந்தார். ஆகவே ஏன் இதனை நீங்கள் வண்மையாகக் கண்டிக்கக் கூடாது? அல்லது ஏன இதற்குரிய நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்திலே எடுக்கக் கூடாது?

பதில்:- இதனை வண்மையாகக்க கண்டிப்பது அல்லது தடுப்பது என்பது இரண்டு விடையங்கள் இருக்கின்றது. ஒன்று இப்பொழுது இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் இஸ்லாமியர் என்கின்ற ஒரு நபருக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழ் சமூகம் நடவடிக்கை எடுக்கின்ற நேரத்தில் இஸ்லாமிய மக்கள் இனவாதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கருதுவதற்கு வாய்ப்பிருக்கின்றது என்பது ஒன்று.

அடுத்ததாக நாங்கள் இஸ்லாமியர்களுக்கு சிறுபான்மையைச் சேர்ந்தவர்களுக்கோ பதவி கொடுக்கவேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிய நாங்கள் கருதவில்லை. ஆனால் இஸ்லாமியராக இருக்கக் கூடிய கிஸ்புல்லா அவர்களுக்கு கொடுத்ததில் பிழை இருக்கின்றது என்பதை நான் சுட்டிக் காட்டியிருக்கின்றேன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். அதற்கான காரணம் கிஸ்புல்லா அவர்கள் தனது வாயால் இனவாதத்தை தூண்டக்கூடிய பல கருத்துக்களை அவரே ஒத்துக்கொண்டு தனது வாயால் ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார். உதாரணமாக நீங்கள் கூறியது போன்று 1994ம் ஆண்டு ஓட்டமாவடியில் இருக்கக் கூடிய காளிகோவிலை இடித்து அங்கே ஒரு மீன் மாக்கேட்டை அமைத்தார். தானே அமைத்தேன் அதனை தடுப்பதற்கு தமிழ்த்தரப்பு முயற்சி செய்தபோது அதற்குத் தீர்புச் சொல்லவிருந்த நீதவானை தானே மாற்றினேன் என்று அவரே ஒப்புதல் வாக்குமூலாம் கொடுத்திருக்கின்றார். இது பல ஊடகங்களில் வந்தது. அது ஒரு விதமான இனவாதக் கருத்து. இரண்டாவதாக ஒக்டோபர் மாதக் காலப்பகுதியிலே அவர் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். வடகிழக்கு இணையுமாக இருந்தால் இரத்த ஆறு ஓடும் என்றதொரு இனவாதக் கருத்தைக் கூறியிருந்தார். இது இரண்டாவதாக அவர் கூறிய கருத்து. மூன்றாவதாக நாங்கள் பார்க்கின்ற பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கக் கூடிய புல்லுமலையில் தமிழ் மக்கள் செரிந்து வாழ்கின்ற அந்த பிரதேசத்திலே தன்னிச்சையாக போத்தலில் நீர் அடைக்கின்ற ஒரு தொழிற்சாலையை அங்கிருக்கின்ற மக்களின் ஒப்புதல் பெறாமல் அது ஒரு நீர் விநியோகம் நீரை எடுத்து வெளிநாட்டிற்கு ஏற்றுகின்ற ஒரு தொழிற்சாலையை உருவாக்கியிருந்தார். அதுவும் தமிழ் மக்களுக்குத் தெரியாமல் செய்கின்ற ஒரு இனவாதமாகத் தான் தமிழ் மக்கள் பார்க்கின்றனர்.

அதனை விட பரவலாக காணிகள் அபகரிப்பு என்பது தொடர்ச்சியாக தானே பல காணிகளை அபகரித்திருக்கின்றார். பல காணிகளை தமிழ் மக்கள் மத்தியிலிருந்து எடுப்பதற்கான முயற்சிகளை செய்திருக்கின்றார். அது ஆரையம்பதி பிரதேச செயலகமாக இருக்கலாம். அல்லது வவுனதீவாக இருக்கலாம் அல்லது வாகரையாக இருக்கலாம் அதைவிட கிரான் பிரதேசத்தில் இருக்கின்ற பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த விடையங்கள் தான் அவர் மூலமாக தமிழ் மக்களுக்கு நேரடியான இனவாதக் கருத்தை அவர் பரப்புகின்றவர். அவ்வாறான ஒருவர் ஆளுனராக இருக்கின்ற எஞ்சிய இந்த பதினொரு மாதங்கள் என்று தான் நான் நினைக்கின்றேன். இந்த பதினொரு மாதங்களுக்குள் அவரை நியமிப்பதன் மூலமாக அவர் தமிழ் மக்களுக்கு எதிரான இந்த காணி அபகரிப்புக்களைச் செய்வார் என்கின்ற ஒரு கருத்து இருக்கின்றது. இன்னொரு கருத்து இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான வேலை வாய்ப்பு கிழக்கு மாகாணத்திற்கு வருகின்ற பொழுது அதிலே புறக்கணிப்புச் செய்வார் என்கின்ற விடையம் இருக்கின்றது. அபிவிருத்தி வருகின்ற பொழுது பரவலாக பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் இருக்கக் கூடிய தமிழ்க் கிராமங்களை இவர் புறக்கணிப்புச் செய்வார் என்கின்ற விடையம் தமிழ் மக்கள் மத்தியிலே இருக்கின்றது. இதற்காகத் தான் நாங்கள் அவர் ஒரு பொருத்தம் அற்றவர் என்ற விடையத்தைக் கூறியிருக்கின்றோம். அதில் இன்னுமொரு விடையம் என்னவென்றால் ஜனாதிபதி அவர்கள் அதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளுநராக வரவேண்டும் என்பதில் எங்களுக்கு அதில் அக்கறை இருக்கின்றது. ஆனால் அந்த நல்லெண்ணம் அவருக்கு இருக்குமாக இருந்தால் இதைச் செய்யவேண்டியது 2018ம் ஆண்டு ஜனாதிபதி ஆகியவுடன் ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை நியமித்திருக்கவேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்கெதிராக நீதிமன்றத்தில் எவ்வாறான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்ற நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த 52 நாள் இடைவெளியை வைத்துக்கொண்டு இருக்கின்ற எஞ்சிய 11 மாதத்திற்கு இவ்வாறானவரை நியமித்து தனது செல்வாக்கை உயர்த்துவதென்பதும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செல்வாக்கை வீழ்த்துவதற்குமாக அவர் இந்த நியமனத்தைச் செய்திருக்கின்றார். இன்னுமொன்று அதில் இருக்கின்றது கிஸ்புல்லா அவர்களை நியமித்ததன் மூலமாக சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கும் ஒரு அடி அடித்திருக்கின்றார் இதிலே என்னவென்றால் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசும் ஜனாதிபதிக்கு எதிராக கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்திருப்பதாகக் காட்டுவதற்காக அவரை நியமித்திருக்கின்றார்.
உண்மையிலே கிழக்கு மாகாண ஆளுநராக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்காமல் பிறமாவட்டதிலே இருக்கின்ற ஒரு சிவில் அமைப்பைச் சேர்ந்த ஒருவரை நியமித்திருப்பின் அதை நாங்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கும். நான் திட்டவட்டமாகக் கூறியிருந்தேன் மேல் மாகாண ஆளுநராக நியமித்திருக்கின்ற ஆசாத் சாலி அவர்களைக் கூட கிழக்கு மாகாணத்தில் அவர் ஆளுநராக நியமித்திருந்தால் கூட இவ்வாறான எதிர்ப்பலைகள் பெரும்பாலும் வந்திருக்கான என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு.

கேள்வி:- இல்லை ஒரு தமிழர் தரப்பிலே ஒருவரை ஏன் இந்த பகுதிக்கு நியமிக்கக் கூடாது?

பதில்:- ஒரு ஆளுநரை நியமிக்கின்ற பொறுப்பு அதிகாரம் எல்லாம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அவர் தமிழரை நியமிப்பதா? அல்லது சிங்களவரை நியமிப்பதா? அல்லது இஸ்லாமியரை நியமிப்பதா? என்று அவர் தான் தீர்மாணிக்கவேண்டும். எந்த ஆலோசனையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமோ அல்லது யாரிடமுமோ அவர் பெற்று அதைச் செய்யவில்லை. எங்களைப் பொறுத்தமட்டில் இஸ்லாமியரை நியமித்திருக்கு தமிழர் தான் தேவை என்று நாங்கள் நடக்கவில்லை. ஏனெனில் சிறுபான்மை என்று வருகின்ற பொழுது எந்த இனத்தவரை நியமித்தாலும் அதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் அவர் நீதியாக நியாயமாக பக்கசார்பு இல்லாமல் ஏற்கனவே இனவாதம் இல்லாமல் எல்லா மக்களையும் அனைத்துச் செல்லக்கூடிய ஆளுநராக இருப்பாராக இருந்தால் அதனை நாங்கள் வரவேற்போம் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

கேள்வி:- கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையல் இந்தக் ஆயுதக்கட்சிகளுடைய பெரும்பாலும் கருணாகுழு பிள்ளையான் குழு என்றெல்லாம் இருக்கின்றது. ஆகவே இவர்களுடைய செயற்பாடு பிள்ளையானைப் பொறுத்தவரையில் முன்னால் மாகாணசபை முதலமைச்சராக இருந்திருக்கின்றார். ஆகவே இவ்வாறு இருக்கின்ற பொழுது இனி வருகின்ற காலங்களிலே இந்த ஆயுதக்குழுக்கள் அல்லது ஆயுதக்கட்சிகளள் உங்களுடைய மாகாணசபையினுடைய அல்லது பாராளுமன்ற நகர்வுக்கு ஒரு தடையாக அமையாதா?

பதில்:- நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் யாரும் ஜனநாயக ரீதியாக இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்ற போது அது மக்கள் அதை யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை அவர்கள் சிந்திப்பார்கள் நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தமட்டில் யார் எந்த ஆயுதக்கட்சிகள் வந்தாலும் அல்லது எந்த புதுவிதமான கட்சிகள் தோன்றினாலும் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு அந்த மக்களை ஆதரிக்கவேண்டும். எவ்வாறு மக்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்று நிச்சயமாக அந்த விடையங்களை நாங்கள் கருத்தில் கொண்டு எதிர்வரும் தேர்தல்களில் அது ஜனாதிபதி தேர்தலாக இருக்கலாம் அல்லது பாராளுமன்றத் தேர்தலாக இருக்கலாம் நாங்கள் நிச்சயமாக வெற்றிபெறுவோம் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இந்த கிஸ்புல்லா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக ஏற்கனவே இருந்தவர். இந்த 2015ம் ஆண்டு இந்த பாராளுமன்ற உறுப்பினராக தேசியப் பட்டியலில் கொண்டுவருவதற்கு முன்னால் அமைச்சர் பங்களிப்பு இருக்கின்றது அது எவ்வாறு என்றால் கடந்த 2015ம் ஆண்டு தேர்தலிலே சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து தான் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் கட்சியும் போட்டியிட்டது. போட்டியிடும் போது கூடுதலான வாக்குகளைப் பெற்றவர் கிஸ்புள்ளா அவர்கள் இரண்டாம் நிலை வாக்குகளைப் பெற்றவர் தமிழ் மக்களுடைய வாக்குகளைப் பெற்றுத் தான் கிஸ்புள்ளா அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படாமல் விட்டால் கூட அந்த பெரும்பாண்மை வாக்குகளைப் பெற்றவர் என்பதனால் தான் அவருக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டது. அப்பொழுது கூட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னால் முதலமைச்சர் அவர்களுடன் சேர்ந்தவர்கள் கூறியது என்னவென்றால் அந்த தேசியப்பட்டில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்களுக்கு கிடைக்கும் என்ற விடையத்தை பல முகநூல்களில் பதிவிட்டிருந்தார்கள் ஆனால் அவ்வாறு கொடுக்கவில்லை. ஆனால் இப்பொழுது கூடா அந்த பதவியை ஜனாதிபதி அவர்கள் பறிந்து அல்லது அவரை ராஜினமா செய்துவிட்டு நிச்சயமாக அந்தப் பதவியை நல்லெண்ணம் ஒன்று ஜனாதிபதிக்கு இருக்குமாக இருந்தால் அடுத்து நிலைக்கக் கூடிய முன்னால் முதலமைச்சர் பிள்ளையான் அவர்களுக்கு வழங்கியிருக்கலாம். ஏனெனில் அதே பட்டியலில் இரண்டாவது நிலையில் இருந்தவர் அவர் தான். ஆனால் யாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது என்றால் கொழும்பில் இருக்கின்ற சிறிலங்கா சுதந்திரக்கட்சி இளைஞராக அணி உறுப்பினராக இருக்கக் கூடிய ஒருவருடைய பெயர் முன்மொழியப்பட்டிருக்கு ஆனால் கொடுக்கின்றார்களால் இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கிஸ்புல்லா அவர்களே கூறியிருக்கின்றார் தனது இடத்திற்கு அந்த கொழும்பில் உள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சி இளைஞர் அணியில் இருக்கக் கூடிய ஒருவரின் பெயரைக் சொல்லியிருக்கின்றார். அவர்தான் நியமிக்கப்படுவார் என்று கிஸ்புல்லா அவர்கள் வாயால் கூறிவிட்டார். ஆகவே இது தான் இங்கு இருக்கின்ற நிலமை இதை தட்டிக்கேட்கவேண்டிய தகுதி தகமை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு இருக்கின்றது. ஏனென்றால் அவரை பாராளுமன்ற உறுப்பினராக தமிழ் மக்களுடைய வாக்குகளை எடுத்து அந்த வாக்குகளைச் சிதறடித்து கிஸ்புள்ளா என்பவரை தேசியப்பட்டியலுக்கு கொண்டு வந்த பெருமை என்பது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கு இருக்கின்றது என்பதனை நான் பகிரங்கமாகக் கூறுகின்றேன்.

கேள்வி:- தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளைச் சார்ந்த பிள்ளையான் அவர்கள் இன்று சிறைச்சாலையிலே அடைக்கப்பட்டிருக்கின்றார் இந்த நிலையிலே அவருடன் சார்ந்த ஒருவரை நியமிக்க நீங்கள் கூறுகின்றீர்களா? அல்லது ?
பதில்:- இல்லை என்னைப் பொறுத்தமட்டில் அவர் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர் குற்றவாளியாக இன்னும் இனங்காணப்படவில்லை. வழக்கு நடந்து கொண்டிருக்கின்றது. அதாவது சந்தேகநபர். சந்தேகநபர் ஒருவரை சிறையில் இருந்தாலும் கூட நியமிக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. ஆனால் குற்றவாளியாக இனங்காணப்பட்டிருந்தால் நியமிக்கத் தேவையில்லை. நான் சொல்லுகின்றேன் அவரை நியமிக்கலாம் அல்லது அவர்கள் சிபாரிசு செய்கின்றவர்களை நியமித்திருக்கலாம். நியமிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது ஆனால் ஜனாதிபதி அவர்கள் அதைச் செய்யவில்லை தேவைக்கேற்ப தமிழ் மக்களைப் பயன்படுத்திவிட்டு தேவைக்கேட்ப விழக்கிச் செல்கின்ற போக்கு சிறிலங்கா அரசாங்கத்தில் இருக்கக் கூடிய மாறி மாறி வந்த சகலருக்கும் இருக்கின்றது. அதில் இவரும் விட்டு வைக்கவில்லை. இப்பொழுது இருக்கின்ற மைத்திரிபால சிரிசேன அவர்களும் அதை விட்டு வைக்கவில்லை. தான் ஒரு இனவாதி என்பதை பகிரங்கமாக இதில் காட்டியிருக்கின்றார்.

கேள்வி:- ராஜபக்ஷh அவர்கள் இருக்கின்ற காலப்பகுதியில் தான் தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளுடைய கட்சியைச் சேர்ந்த பிள்ளையான் அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவ்வாற இருக்கின்ற பொழுது அதாவது இலங்கையை நாங்கள் பல்நோக்கு தூர பார்வையில் நாங்கள் பார்க்கின்ற பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மகிந்த ராஜபக்ஷhவுக்கு ஆதரவு வழங்கியிருந்தால் பிள்ளையான் அவர்களை ஆளுநராக நியமிப்பதற்கு ஒரு வாய்ப்புக்கள் இருந்திருக்கும் அல்லவா?

பதில்:- நீங்கள் ஆதரித்து இருக்கலாம் என்று சொல்லுவது இந்த 52 நாட்களில் முரண்பாடு வந்தபொழுது மைத்திரிபால சிறிசேன அவர்கள் நியமித்த பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ஷh அவர்களை ஆதரித்திருந்தால் என்ற அந்த விடையத்திற்கு வருகின்றீர்கள். உண்மையிலே மகிந்த ராஜபக்ஷh அவர்கள் ஜனாதிபதியாக இருக்கின்ற பொழுது தமிழ் மக்களாகிய நாங்கள் இரண்டு முறை அவர்களுக்கு எதிராக வாக்களித்திருக்கின்றோம். அது என்ன காரணத்துக்காக நாங்கள் வாக்களித்திருந்தோம் என்றால் ஏற்கனவே வடகிழக்கில் இருக்கக் கூடிய பல்வேறு பட்ட இனப்படுகொலைக்கு இவர் சூத்திரதாரியாக இருந்தார் என்பதற்காகக் கூட 2010ம் ஆண்டு காலப்பகுதியிலே நேரடியாக களத்தில் நின்று போர் செய்த சரத்பொன்சேகாவை ஆதரித்தவர்கள் தமிழர்கள் கூடுதலாக வடமாகான மக்களும் ஆதரித்தார்கள், கிழக்கு மாகான மக்களும் ஆதரித்தார்கள் ஏன் அவர்களை ஆதரித்தார்கள் என்றால் சரத்பொன்சேகா மேல் உள்ள காதலினால் அல்ல மகிந்த ராஜபக்ஷ மேல் கொண்ட வெறுப்பினால் அதை நாங்கள் செய்தோம் ஆனால் அந்த ஆண்டு நாங்கள் ஆதரித்தவர்கள் வரவில்லை. ஆனால் அடுத்த தரம் 2015ம் ஆண்டு இதே நிலை இருந்தது இவரை எப்படியாவது தோற்கடிக்கவேண்டும் என்ற என்ன வடகிழக்கில் இருக்கக் கூடிய தமிழ் மக்களுக்கும் தமிழ் பேசக் கூடிய மக்களுக்கும் இருந்ததன் காரணமாகத்தான் மைத்திரிபால சிறிசேனாவுக்கு வாக்களித்ததே தவிர மைத்திரி சிறிசேனா மீது கொண்ட காதலுக்காக அவருக்கு வாக்களிக்கவில்லை. இவரைத் தோற்கடிப்பதற்காக ஒரு கருவியாக அவரைப் பயன்படுத்தி அவருக்கு வாக்கழித்தோம் இது தான் உண்மையான அரசியல் நிலைப்பாடு. அப்படியிருக்கின்ற பொழுது இந்த 52 நாட்கள் நடைபெற்ற இந்த அரசியல் நாடகத்திலே நாங்கள் இரண்டு முறை இனப்படுகொலையாளி என்று மக்களால் நிராகரிக்கப்பட்டு ஜனாதிபதியாக அவர் வரமுடியாது என்று கூறிய நாங்கள் எவ்வாறு இந்த பிரதமராக அவரை நியமிக்க முடியும். அதான் அதில் இருக்கின்ற விடையம். இரண்டாவது விடையம் இந்த நல்லாட்சி என்ற போர்வையிலே மைத்திரிபால சிரிசேனாவுக்கு அதிகமான வாக்களித்தவர்கள் இந்த வடகிழக்கிலே இருக்க கூடிய தமிழ் பேசும் மக்கள் அதிலே கிழக்கு மாகானத்தில் இருக்கக் கூடிய தமிழ் பேசும் மக்களும் வாக்களித்திருந்தார்கள். எல்லோரும் வாக்களித்திருந்தார்கள். ஆனால் பிரதமராக சடுதியாக அவரை மாற்றுகின்ற பொழுது ஒரு வார்த்தை கூட அவரைக் கொண்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ கேட்டு அதை அவர் செய்யவில்லை. தன்னிச்சையாக அவர் மாற்றியிருந்தார். அது அவர் செய்த இரண்டாவது பிழை. மூன்றாவது பிழை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாங்கள் ஒற்றுமையாக இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்த வேளை எங்களிடமிருந்து ஒருவரை பிரித்தெடுத்து எங்கட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வியாழேந்திரன் அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தெரியாமல் புடுங்கி எடுத்துவிட்டு மற்றவர்களிடம் ஆதரவு கேட்கின்றார் இது எந்தவிதத்தில் நாயம் உண்மையில் இது தான் அரசியல் முரண்பாட்டுக்கான காரணமாக இருந்தது.

கேள்வி:- உங்களுடைய ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற அவர் புளொட் கட்சியினுடைய அங்கத்தவராக இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே கேட்டிருந்தார் வியாழேந்தரன் அவர்கள். ஆனால் அவர் கூறுகின்றாரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் பிழையால் தான் இவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டது என்று சொல்லுகின்றாரே?

பதில்:- ஒருவர் கட்சி மாறியதற்கு பிற்பாடு கருத்துக்கூறுவது என்பது இலகு நீங்கள் இவரை மாத்திரமல்ல இதற்கு முன்னரும் எங்களுக்கு அனுபவi இருக்கின்றது அம்பாறை மாட்டத்தில் இருக்கின்ற பியசேனா அவர்களும் இவ்வாறு தான் மாறியிருந்தார். கருத்துக்களைக் கூறினார் கருத்துக்களைக் கூறிவிட்டு என்ன நடந்தது அடுத்த தேர்தலிலே கேட்டார் மக்கள் என்ன செய்தார்கள். இது போன்று தான் தங்கேஸ்வரி அக்கா எங்களுடன் இருந்து தேர்தல் கேட்டுவிட்டு என்ன நடந்தது அடுத்த தேர்தலில் 1200 வாக்குகள் கூட எடுக்கமுடியவில்ல. ஏன் வவுனியாவில் இருக்கின்ற கிஷேhர் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கேட்டவிட்டு அடுத்த தேர்தலில் அவர் வெல்லமுடியவில்லை. ஏன் அதைவிட யாழ்ப்பாணத்தில் இருக்கக் கூடிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எங்கள் நண்பர் கஜேந்திரன் சகோதரி பத்மினி சிதம்பரநாதன் என்னுடன் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள். மிகவும் உறுதியானவர்கள் அதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் என்ன நடந்தது அவர்களும் தமிழ் தேசியத்திற்காக தனது செயற்பாட்டினை எடுத்துக் கொண்டு சென்றாலும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே தேர்தல் கேட்கது இன்னொரு கட்சியில் கேட்கின்ற பொழுது அதிலயும் அவர்களை மக்கள் நிரகரித்திருந்தார்கள். இது இயல்பான ஒரு வரலாறாக இருந்தது. ஆகவே கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர். இப்பொழுது என்ன காரணத்துக்காக மாறினார் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவர் மாறுவதற்கான காரணம் மக்களுக்குச் சொல்லத்தான் வேண்டும். அது அவரின் கருத்தாகத்தான் நான் பார்க்கின்றேன் அந்தக் கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.

கேள்வி:- அதாவது வந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தற்பொழுது வழிநடத்திக் கொண்டு இருப்பவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் செயற்படுகினறார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. பராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல ஏனையவர்களும் அந்த குற்றச்சாட்டை முன் வைக்கின்றார்கள் இதை நீங்கள் எப்படிப் பார்க்கின்றீர்கள்?

பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அப்படியான குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. பொதுவாக ஒரு குடும்பமாக எடுத்தாலும் சரி ஒரு சங்கமாக எடுத்தாலும் சரி பொதுவாக ஒரு சங்கமாக இருந்தால் ஒருவர் இருவர் தான் சில விடையங்களை கையாழுவார்கள். அதே போல் தான் கௌரவ சுமந்திரன் அவர்கள். அரசியல் விவாகாரத்துக்காக நாங்கள் அவரை நியமித்திருந்தோம். சர்வதேச விவாகாரத்துக்காக அவரை நாங்கள் நியமித்திருந்தோம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளராக அவரை நாங்கள் நியமித்திருக்கின்றோம். இவ்வாறு மூன்று தேவைகள் கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இனங்காணப்பட்டு பாராளுமன்றக் குழுவிலே அவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். சில நடவடிக்கைகளை நாங்கள் நியமித்து விட்டு அவர்கள் எடுக்கின் விடையங்களை நாங்கள் பிழை கூறமுடியாது. சிலருக்கு அது பிழையாகத் தெரியலாம் ஆனால் அந்த செயற்பாட்டின் முடிவுகள் வருகின்ற பொழுது அவர் செய்தது சரியென்று நினைக்கலாம். இதற்கு நான் சிறு உதாரணம் சொல்கின்றேன் இந்த 52 நாட்களுக்கு முன்பு இருந்த அரசியலுக்கும் 52 நாட்கள் நடத்த அரசியலுக்கு இவரின் பங்களிப்பு என்பது கூடுதலாக இருந்தது. இப்பொழுது இவரின் விடையம் இவர் ஒரு சரியான பாதையில் செல்கின்றார் என்ற விடையம் பல மக்கள் மத்தியிலே வந்திருந்தது. எனவே ஒருவர் ஒரு செல்வாக்குச் செலுத்துகின்ற அரசியல் செய்கின்ற பொழுது இன்னொருவர் பிழைபிடிப்பதென்பதும். அவரை குரோத மனப்பான்மையிலே பார்ப்பதென்பதும் அந்தளவுக்கு அவர்கள் எங்களை பல கோணங்களில் காய்க்கின்ற மரம்தான் கல்லெறிபடும் என்பது போல பலர் தாக்குகின்றார்கள் அதிலே நாங்கள் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஆனால் மக்களுக்குத் தெரியும்.

தொடரும்………..

SHARE