ஒரு வருடகாலத்திற்குள் கிழக்கில் நான் நினைத்ததை செய்து முடிப்பேன்- கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா.

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு இனி நிரந்தர தீர்வொன்று கிடைக்கப் பெறும் இதற்கான சகல விடயங்களையும் இன மத மொழி வேறுபாடின்றி கடமையாற்ற தன்னை அர்ப்பணித்துள்ளேன் என கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். 

திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்தில் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஆளுநர்

கிழக்கு மாகாண ஆளுனர் பதவி தனக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதியிடத்தில் கேட்டுப் பெற்றுக் கொண்டதாகவும் ஒரு வருட காலமே ஆளுனராக பதவி வகித்து விட்டு அடுத்த வருடத்திற்குள் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாகவும், மக்களுடைய பிரச்சினைகள் பல இன்னல்கள் என கிழக்கில் காணப்படுகிறது இதற்காக பூரண இதய சுத்தியுடன் கிழக்கின் நண்பணாக செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் அரச அதிகாரிகளாயினும் சரி மிகவும் சுமூகமாக பழகக் கூடிய நல்எண்ணம் கொண்டு அதிகாரத்தை துஷ்பிரயோகமற்ற முறையில் செயற்படுவதாகவும் கிழக்கில் தொண்டராசிரியர்கள், ஆசிரியர்கள் பற்றாக்குறை சுகாதார ரீதியான பல பிரச்சினைகள் காணப்படுகிறது அனைத்தையும் உணர்ந்து இதற்கான நிரந்தர தீர்வொன்றை முன்வைத்து புதிய செயலணிகளை உருவாக்கி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளோம் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

அரச அதிகாரிகளின் ஆதரவும் மக்களின் ஆதரவும் தேவை அரச பணத்தில் தங்களுக்கான சம்பளம் பெற்றுத் தரப்படுகிறது தனக்கும் இவ்வாறே கிடைக்கப்பெறுகிறது மக்களின் பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல கிழக்கில் இன முரண்பாடுகளற்ற சமுதாயத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் தனக்கு ஆளுனர் பதவி வழங்கிய ஜனாதிபதிக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.his

About Thinappuyal News