உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஓரு வரலாற்று தீர்ப்பாகவே த.தே.கூ பார்க்கின்றது. பா.அரியநேந்திரன்.

கேள்வி: – அதாவது இனப்படுகொலையாலே மகிந்த ராஜபக்ச அவர்களை நீங்கள் கொண்டுவரக்கூடாது என்பதிலே தமிழ் தேசிய கூட்டமைப்பு முனைப்பாக இருந்தது. அப்படியானால் டட்லிசேனநாயக்க தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை U.N.P அரசாங்கம் அந்த இனப்படுகொலையை செய்யவில்லையா?

பதில்:-  நிச்சயமாக என்னைப் பொருத்தவரையில் ஜனாதிபதியாக இருந்து J.R  ஜெயவர்த்தனாவாக இருக்கலாம் சந்திரிகா குமாரதுங்கவாக இருக்கலாம் R. பிரேமதாசவாக இருக்கலாம் இப்பொழுது இருக்கின்ற மகிந்த ராஜபக்சவாக இருக்கலாம் இந்த இனப்படுகொலை என்கின்ற
விடயம் இல்லாமல் போனதுக்கு பிறகு தான் மைத்திரிபால சிறிசேன அவர்கள் வந்திருக்கிறார். எவருமே தமிழ் மக்களுக்கான உரிமை கொடுப்பதற்கோ தமிழ் மக்களுக்கான தீர்வு கொடுப்பதற்கான மனப்பாங்கிலோ இல்லை. ஐக்கிய தேசிய கட்சியை பொருத்தமட்டில் அந்த அரசாங்கம் தான் யாழ் நூல் நிலையத்தை எரித்தது, ஆசியாவிலே பெரிய நூல் நிலையத்தை எரித்தது, பல இனப்படுகொலையை செய்திருக்கினிறது. ஆனால் 51 நாட்களிலே இருக்கின்ற
விடயம் வந்து அந்த விடயமல்ல. ஒரு ஜனநாயக ரீதியாக இருந்த ஒரு     பாராளுமண்டத்தை 19வது அரசியல் சட்டத்திற்கு முரணாக தன்னிச்சையாக ஒரு ஜனாதிபதி செயற்பட்டார் என்பதை காட்ட
வேண்டும் என்பதில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதில் கூடுதல் அக்கறை செலுத்தியது. அவ்வாறு செலுத்திய போது யார் பிரதமராக வர வேண்டும் என்றால் ஏற்கனவே இருந்த பிரதமர் வர வேண்டும் என்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கான ஆதரவு தெரிவித்தது.
ஆனால் ஐக்கிய தேசிய கட்சியிலே கூடுதலான அங்கத்தவர்கள் இருந்திருந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிலே வேறு படுகின்ற போது ஆதரவு வகிக்காமல் தடுத்திருக்கலாம். ஆனால் இந்த 16 பேரும் நடுநிலை வகித்திருந்தால் நிச்சயமாக மகிந்த ராஜபக்சவை நாங்கள் தன்னிச்சையாக கொண்டு வந்த துரோகத்தனத்துக்கு நாங்கள் ஆளாக வேண்டும் என்பதை தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுதியாக சொல்கின்றது.

கேள்வி:- நீங்கள் ஒரு நடுநிலையாக இருந்து கொண்டு தேர்தலை சந்திப்பதற்கு ஏன் தயாராகஇல்லை?

பதில்: இதில் நடுநிலையாக இருந்து கொண்டு தேர்தலை சந்திப்பதற்கு அல்ல. தேர்தலை சந்திப்பதாக இருந்தால் சட்டத்திற்கு சரியான முறையில் அவர் நாடாளுமன்றத்திலே
கதைத்திருந்தால் தேர்தலிலே போட்டியிடுவதற்குரிய வாய்ப்பு இருந்தது.   ஆகவே அவர் சட்டத்திற்கு முரணாக அவர் செயற்பட்டார் என்பதை நீதிமன்றமே வெளிக்காட்டிவிட்டது. ஆகவே நீதிமன்றம் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டார் என்பதை வெளிக்காட்டியதற்கு பிரகு
தற்பொழுது இருக்கின்ற பாராளுமன்றத்தை கொண்டு வருவது தானே ஒரே வழி. எவ்வாறு நடுநிலையாக இருந்துவிட்டு பாராளுமன்ற தேர்தலை நடத்த முடியும்.  நடத்த முடியாதே அவர்
பிரதமராக மகிந்த ராஜபக்ச வந்திருப்பார். அமைச்சரவை வந்திருக்கும் இந்த அரசாங்கம் அவ்வாறே ஒரு வருடம் கடந்திருக்கும். ஆகவே அவ்வாறு செல்லக்கூடாது என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக இருந்தது. நிச்சயமாக தற்பொழுது அவர் கொண்டு வந்த சட்டத்தின் பிரகாரம் 3/2 பெரும்பான்மையை பாராளுமன்றத்திலே நிறைவேற்றி
பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அதிகாரம் இருக்கின்றது. அவ்வாறு ஒரு நிலை வருமாக இருந்தால் நாங்கள் அந்த தேர்தலுக்க          முகங்கொடுப்பதற்கு முடியும்.

கேள்வி: அதாவது நீங்கள் சர்வதேச நீதிமன்றத்திலே இனப்படு கொலையாழி மகிந்த ராஜபக்ச அவர்கள் போர் குற்றங்கள் தொடர்பான விசாரனை இருக்கின்றது. அது போன்று அந்த
இராணுவத்தினருக்கு இருக்கின்றது. பலருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று சர்வதேச ரீதியில் பார்க்கும் பொழுது இலங்கையரினுடைய வரலாற்றிலே முதன்முதலாக ஒரு ஜனாதிபதி அவர்களால் கொடுக்கப்பட்ட தீர்ப்பு பிழை என்று இந்த உச்ச நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது. இது உண்மையிலே வரலாற்று தீர்ப்பாக இருந்தாலு கூட இதைப் போன்று இந்த போர் குற்றங்கள் அல்லது இனப்படுகொலை என்ற சர்வதேச நீதிமன்றத்திலே சொல்லப்படுகின்ற விடயங்களுக்கு ஏற்கனவே அரசாங்கம் கூறிக்கொண்டு இருப்பதை போன்று சுயாதீன விசாரணைகளினாலே இதை தீர்த்து விட அரசாங்கம் முனைப்பான ஒரு நிலைப்பாடாக இதை ஏன் கருதமுடியாது.

பதில்: 19வது அரசியல அமைப்   பாராளு மன்றத்தில் நிறைவேற்றியதற்கு  பிரகு நீதிமன்ற ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு, பொது நிர்வாக ஆணைக்குழு, போன்ற அனைத்தும் தன்னிச்சையாக இயங்குவதற்கான சட்டமூலம் இந்த 19வது அரசியலமைப்பிற்கு பிரகு  தான் வந்தது. ஆகவே அதற்கு முன்பு இனப்படுகொலை என்பது சர்வதேச ரீதியாக
சென்றுவிட வேண்டும் என்று ஐ.நா சபையிலே பல முறை அது வாக்கெடுப்பு இடம் பெற்றுள்ளது. ஆகவே இப்பொழுது தான் அந்த நீதித்துறை ஒழுங்காக இருக்கின்றது. தற்பொழுது நீதித்துறை
ஒழுங்காக இருக்கின்றது என நாங்கள் எண்ணிக்கொண்டு சர்வதேசத்திற்கு சென்றிருக்கும் சர்வதேச விசாரணையை நாங்கள் அதை திருப்பிசுயாதீன  விசாரணையாக கொண்டு வருவோமாக
இருந்தால் அது நாங்கள் இனத்திற்கு செய்கின்ற துரோகமாகத்தான் அமையுமே தவிர அது நல்ல தீர்ப்பு வருமென்று நான் நினைக்கவில்லை. அடுத்தது இது இனப்படுகொலை ரீதியான விடயத்தை உள்ளுரில் இருக்கின்ற நீதித்துறை எந்த வகையில் கையாளும் என்பதில் எனக்கு
நம்பிக்கை இல்லை. ஆகவே இது அந்த விடயம் என்பதையும் தற்பொழுது இருக்கின்ற அரசியல் முரண்பாட்டுக்கெதிராக பாராளுமன்றத்தில் நடந்த அந்த விடயத்தையும் ஒன்றாக பார்க்க முடியாது. அது இனப்படுகொலைக்கான நீதி நியாயம் என்பது வேற சட்டவாக்க சட்ட
நியாயத்திலே இருக்கின்றது. இது அரசியல் தொடர்பான சட்டவாக்கம் என்பது வேறு. அந்த அரசியல் யாப்பு தொடர்பான சட்டவாக்கத்தை தான் நீதித்துறை சரியான முறையில் கையாண்டுள்ளது என்பது தான்  உண்மை.

கேள்வி: சர்வதேச ரீதியாக இராணுவத்தினரையும் மகிந்த ராஜபக்சவையும் காப்பாற்றுவதற்கான
ஒரு இராஜதந்திர நகர்வு என்று இதை கருத முடியாதா?
பதில்: அதை நாங்கள் கருதமுடியாது ஏனென்றால் நீதித்துறை வந்து எந்த நீதித்துறை தொடர்பாக நாங்கள் மனுத்தாக்கல் செய்கின்றோமோ அந்த நீதி தொடர்பாக சட்டவாக்கம்  சட்டத்துறை அதிலே கையாண்டு இருக்கின்றது. உதாரணமாக ஏற்கனவே 4 நீதிபதிகள் சேர்ந்து
எடுத்த முடிவு தான் 7 நீதிபதிகளும் எடுத்திருக்கின்றார்கள். ஆகவே அதை நாங்கள் இதனுடன் சேர்த்து செய்ய முடியாது. ஏனென்றால் நீங்கள் கூறுகின்ற விடயம் அது அரசியலுடன் சம்பந்தப்பட்டது. ஆகவே நீதித்துறையை அரசியல்வாதிகளாக நாங்கள் பார்க்க முடியாது

கேள்வி: அப்படியாக இருந்தால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலே நீதிமன்றத்திலே வழக்குத்தாக்கல் செய்தவர்களை விடுதலை செய்வதற்கான முன் நடவடிக்கைகளை தமிழ்
தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றம் எடுக்கலாம் தானே?

பதில்: கடத்தப்பட்டு காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலாக ஏற்கனவே சர்வதேச ரீதியில்
எடுக்கப்பட்டதற்கு ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதற்கான அலுவலகம் திறக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டம் என்பது ஒன்றாக நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே அந்த வேலைத்திட்டங்கள் ஒரு முடிவாக அல்லது அதற்கான ஒரு வாய்ப்பாக இன்னும் வரவில்லை.
அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. அது தொடர்பாக பல அரசியல் யாப்பு அதற்குள்ளே வந்திருக்கின்றது, நீதித்துறையில் இருக்கின்றது, காணி விடுவிக்கப்பட வேண்டும் என்ற விடயம் இருக்கின்றது. அரசியல் கைதிகளை விடுவிக்கப்பட வேண்டும் என்பது இது அரசியல்
ரீதியாக பார்க்கப்படுகின்ற விடயம். ஆகவே இது அரசியல் யாப்புக்கு முரணாக செயற்பட்டது என்ற தீர்ப்பு மாத்திரம் தான் இடம்பெற்றிருக்கின்றது. ஆகவே இந்த தீர்ப்பை வைத்துக்கொண்டு நாங்கள் அதைப் பார்த்திருக்கலாம், இதைப்பார்த்திருக்கலாம்
என்பதை இப்பொழுது தான் நாங்கள் எல்லாரும் சொல்கின்றோம். ஆகவே இனிமேல் பார்க்கக்கூடிய சந்தர்ப்பமாக இருந்தால் நிச்சயமாக பார்க்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதை ஏற்றுக்கொள்கின்றேன்.

கேள்வி: உங்களைப் பொருத்தவரையிலே இந்த மைத்திரிபாலசிறிசேனவினுடைய நடவடிக்கைகள் ஒரு
அரசியல் யாப்பிற்கு முரணான செயற்பட்டதாக கூறுகின்றீர்கள். அதே நேரம் மகிந்தராஜபக்ச இருந்த காலகட்டத்திலே அரசியல் யாப்புக்கு முரணாக செயற்பட்டார் தானே?

பதில்: நிச்சயமாக மகிந்த ராஜபக்ச அவர்கள் அரசியல் யாப்புக்கு முரணாக பல விடயங்களை
செய்திருக்கின்றார். அப்பொழுது இருக்கின்ற உதாரணமாக வடகிழக்கு இணைப்புக்கு எதிராக நாங்கள் வழக்கு தாக்கல் செய்திருக்கின்றோம். அதை நான் தற்பொழுது ஞாபகப்படுத்துகின்றேன். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். 2006ம் ஆண்டு J.V.P யால் கொண்டுவரப்பட்டது வடகிழக்கை பிரிக்க வேண்டும் என்ற
சட்டமூலம் பாராளுமன்றம் உயர் நீதிமன்றத்தில் வழக்குதாக்கல் செய்யப்பட்டது. வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற நேரத்திலே தற்பொழுது எல்லோரும் சொல்கின்றார்கள் ஏன் அதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வழக்கை எடுத்திருக்கலாமே என்று. எனக்குத்தெரியும் நான் மட்டக்களப்பிலே அம்பாறை மாவட்டத்திலே இருந்து இன்னும்
திருகோணமலையில் இருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரை கொன்று அந்த சட்டத்தின் முன் நாங்கள் ஒரு பூர்வீக தாயகமாக வடகிழக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் அதை பிரிக்க முடியாது என்று வாதாடுவதற்காக அப்பொழுது சுமந்திரன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அல்ல. கனகேஸ்வரன்
அவர்கள் சுமந்திரன் அவர்கள் அந்த வழக்கை வாதாடுவதற்காக கேட்டிருந்தார்கள். மனு செய்திருந்தார்கள். ஆனால் அப்பொழுது இருந்த நீதிபதி அவர்கள் இடம் கொடுக்கவில்லை. அதை வாதாடுவதற்கான சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. அந்த சந்தர்ப்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தான் அந்த தீர்ப்பு வந்தது. அது போன்று தான் 19வது யாப்பிற்கு முந்திய விடயங்கள் தான் இவை எல்லாம். J.V.P வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு வடகிழக்கு இரண்டாக
பிரிக்கப்பட்டது தானே அந்த வழக்கு நடக்கின்ற போது முகநூலில் நான்
பார்க்கின்றனான். தமிழ் தேசிய கூட்டமைப்பு அதற்கு வழக்குத்தாக்கல் செய்திருக்கலாம் தானே அதற்கு ஏன் வழக்குத்தாக்கல் செய்யவில்லை என்ற எல்லோரும் கேட்டிருந்தனர். வழக்குத் தாக்கல் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது எனக்குத்தெரியும் அப்பொழுது
இருக்கின்ற சூழ்நிலை 2006ம் ஆண்டு பெரிய ஒர் சூழ்நிலை அந்த கஷ்டத்தில் கூட அதற்கு சாட்சிகள் சொல்வதற்காக பூர்வீக குடிகளாக இணைந்து வடகிழக்கில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் இதை பிரிப்பதற்காக நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம்
என்ற அந்த விவாதத்திற்காக ஆட்களை திரட்டிக்கொண்டு சாட்சி சொல்வதற்காக சென்ற போதும் கூட அதற்கு இடம் கொடுக்கவில்லை. அது தான் அப்பொழுது இருந்த நீதித்துறை. இப்போது இருக்கின்ற நீதித் துறை என்பது 2019ம் ஆண்டுக்குப் பிற்பாடு அந்த நீதித்துறை இருக்கின்றது அதை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம்.

கேள்வி:- அப்படியான மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஒரு நீதிக்கான வழிமுறையைஏற்படுத்தித் தந்திருக்கின்றார்கள் என்று சொல்கின்றீர்களா?

பதில்:- நிச்சயமாக அவர் நீதிக்கான வாழியை ஏற்படுத்தியிருக்கின்றார் என்பதைச் சொல்ல அவர் இந்த 19வது திருத்தச்சட்ட யாப்பை கற்றுக்கொள்ளவில்லை என்று தான் நான் நினைக்கின்றேன். அவ்வாறு பாலர்பாடசாலையில் இருக்கின்ற மாணவனுக்குக் கூட  அதிலிருக்கின்ற சட்டநுனுக்கம் 19 அரசியல் யாப்பில் இருக்கின்ற விடையம்
தெரிந்திருந்தும் கூட இவருக்கு யார் அந்த சட்ட  ஆலோசனை கூறினார்களோ எங்களுக்குத் தெரியவில்லை. அவர் அதிலே தவறு விட்டிருக்கின்றார் என்பதனை இந்த தீர்ப்பு மூலம் அவர் உணர்ந்திருப்பார் என்று நான் நினைக்கின்றேன்.

கேள்வி:– கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கின்ற அரசாங்கத்தினால் உங்களைப் பொறுத்தவரையில்
என்னென்ன விடையங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது

பதில்:– நல்லாட்சி என்று கூறுகின்ற போது நாங்கள் நல்லாட்சி என்பதைக் கொண்டு வந்தது அபிவிருத்திக்காக இல்லை. கிழக்கு மாகாணம் வேறு வட மாகாணம் வேறு என்று பிரித்து பார்த்து அரசியல் செய்வதற்கு நாங்கள் நல்லாட்சியைக் கொண்டு வரவில்லை. வடகிழக்கு
இணைந்த ஒரு தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு அரசியல் தீர்வைப் பெறவேண்டும் அரசியல் தீர்வைப் பெறுவதற்காக முதற்கட்டமாக அந்த அரசியல் அமைப்பை மாற்றவேண்டும். அந்த விடயத்திற்காகத் தான் அது கொண்டு வந்தது உங்களுக்குத் தெரியும்
22சுற்றுப் பேர்ச்சுவார்த்தைகள் பல நடந்து வழிநடத்தல் குழுக்கள் நடைபெற்று இறுதியாக நடைபெற்ற விடையம் கடந்த நவம்பர் மாதம் 7ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்ற பொழுது அது இல்லாமல் போனது. ஆனால் கிழக்கு மாகாணத்தில்  நீங்கள் தனித்து கேட்கின்ற பொழுது நல்லாட்சி என்ன செய்திருக்கின்றது என்றால் அது
பொதுவாக எல்லாருக்கும் கிடைக்கின்ற விடையம் தான் அதனை வடக்கு, கிழக்கு, தெற்கு என்று நான் சொல்லவில்லை. அபிவிருத்திகளுக்காக ஒதுக்கின்ற அந்த நிதிகள் எங்கள்
பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக எங்களுக்கு கிடைத்திருக்கின்றது. நல்லாட்சி அரசாங்கத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் செய்திருக்கின்றார்கள். ஆனால் எங்கள் அபிலாசைகளுடன் இருந்த அரசியல் வேலைத்திட்டங்கள் பூச்சியமாகத் தான் இருந்தது.

About Thinappuyal