மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்த மானஸ்வி

மீண்டும் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து வருகிறார் மானஸ்வி.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த வருடம் (2018) வெளியான படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்த இந்தப் படத்தில், சிறப்புத் தோற்றத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. சைக்காலஜிக்கல் த்ரில்லராக இந்தப் படம் எடுக்கப்பட்டது.

இதில், விஜய் சேதுபதி – நயன்தாரா தம்பதியின் குழந்தையாக மானஸ்வி நடித்தார். காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள் இவர்.

படத்தில் மானஸ்வி பேசிய, ‘ஓங்குடா டேய்… ஓங்கிப் பாரேன்… ஓங்குவானாமே… சொட்ட, சொருகிருவேன்’ என்ற வசனம், மிகப் பிரபலம். குழந்தைகள், பெரியவர்கள் என எல்லாருமே ‘டிக் டாக்’கில் இந்த வசனத்தைப் பேசியுள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் விஜய் சேதுபதி மகளாக நடித்து வருகிறார் மானஸ்வி. சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஆட்டோ டிரைவராக விஜய் சேதுபதி நடிக்க, அவருடைய மகளாக மானஸ்வி நடிக்கிறார். ஹீரோயினாக காயத்ரி நடிக்கிறார்.

தேனியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, இளையராஜா – யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.

About Thinappuyal News