பிணைமுறி மோசடி தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதத்தைக் கோருவதற்கு கடிமொன்றும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதத்தைக் கோருவதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பாக பாராளுமன்ற செயளாலருக்கு கடிமொன்றும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை மற்றும் வீதி அபிவிருத்திகள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் இரண்டு நாட்கள் பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமெனக் கோரி பாராளுமன்ற செயளாலருக்கு கடிதமொன்றினை அனுப்ப தீர்மானித்துள்ளோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள பிணைமுறி ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மூவர் அடங்கிய குழு, கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் மத்திய வங்கி பிணைமுறி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றினை சமர்பித்திருந்தனர்.

அந்த அறிக்கையின் படி கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் 889 பில்லியன் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்திற்குள் 11 பில்லியன் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 வரை இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் தொடர்பாக இரண்டு நாட்கள் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி பாராளுமன்ற செயளாலருக்கு கடிதமொன்றிணை அனுப்பவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

About Thinappuyal