சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட ஒரு தொகை கடல் அட்டைகள்

சட்ட விரோதமாக பிடிக்கப்பட்ட ஒரு தொகை கடல் அட்டைகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வட – மத்திய கடற்படை கட்டளை தலைமையகத்தின் கடற்படையினரால் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது மன்னார் கடற்கரை பிரதேசத்தில் இவ்வாறு சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுமார் 302 கிலோ கிராம் கடல் அட்டைகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இவை மீட்கப்பட்ட குறித்த இடத்திலிருந்து சட்ட விரோத கடற்றொழில் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த கடல் அட்டைகள் மீன்பிடி இயந்திரத்தினுள் 12 பைகளில் பொதியிடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் மீட்கப்பட்டுள்ள கடல் அட்டைகள் மற்றும் இயந்திரங்கள் என்பன மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ் சுங்க திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

About Thinappuyal News