நீர்வேலியில் த.தே.கூட்டமைப்பின் பிரதேச பணிமனை திறப்பு

தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச பணிமனை இன்று காலை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மித்ததாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை. சோ.சேனாதிராசா, க.சுரேஸ் பிரேமச்சந்திரன், ந.சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே. சிவாஜிலிங்கம், கந்தையா சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், பா.கஜதீபன் ஆகியோருடன் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் பிரதித்தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அலுவலகத்துக்கான பெயர்ப்பலகையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் திரைநீக்கம் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அலுவலகத்தின் பிரதான மண்டபத்தை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா நாடாவை வெட்டித்திறந்து வைத்தார்.

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் தமது கருத்துரைகளை வழங்கினர்.