இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 24 பேர் கைது

9

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்திய பிரஜைகள் 24 பேர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இங்கிரிய பிரதேசத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள விசாரணைப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அவர்கள் அனைவரும் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்துள்ளதுடன், அவர்களின் விசா காலம் நிறைவடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த இந்தியர்கள் 24 பேரும் மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்படவுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் மேட்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது..