இறுதி நாள் நிகழ்வாக மாணவர்களின் ஊர்வலமும் வீதி நாடகமும்

7

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய கடந்த 21.01.2019 முதல் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த போதை பொருள் ஒழிப்பு சம்பந்தமான வேலைத்திட்டங்களில் இறுதி நாள் நிகழ்வாக மாணவர்களின் ஊர்வலமும் வீதி நாடகமும் 25.01.2019 நேற்று  நோர்வூட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களால் நோர்வூட் நகரில் முன்னெடுக்கப்பட்டது.

வித்தியாலயத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு எதிரான பாதாதைகளை ஏந்தி நகரில் ஊர்வலமாக சென்றதுடன். நகரின் இரண்டு இடங்களில் வீதி நாடகமும் இடம்பெற்றது.

போதை பொருட்களால் ஏற்படும் விளைவுகள் அல்லது பாதிப்புகள் அதனை தடை செய்வதற்கு மாணவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் இந்த வீதி நாடகம் மூலமாக சமூகத்திற்கு தெளிவுபட்டப்பட்டது.

போதை பொருட்களை பயன்படுத்துவதால் பெருந்தோட்ட மக்கள் எவ்வாறான சமூக, பொருளாதார, சுகாதார பாதிப்புகளை எதிர் நோக்குகின்றனர் என்றும் இங்கு தெளிவுப்படுத்தப்பட்டது.