நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் விபத்து

11

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் சென்ற லொறி, திடீரென வீதியை விட்டு விலகி குடைச்சாய்ந்ததில் விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது இந்நிலையில் அவரின் உதவியாளர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திஸ்ஸமஹாராம – அக்கரபத்தனைக்கு கால்நடைக்கான உணவுகளை ஏற்றிச்சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.