பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் புத்த சாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

மகாநாயக்க தேரர்கள் மற்றும் இந்து சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்டவர்கள் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோரிக்கைகளை தாழ்மையுடன் ஏற்று ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

About Thinappuyal