லெப்டினன்ட் ஜெனரல் டெனிஷ் ஜிலேன்ஷ்போருக்கும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவுக்கிடையிலான சந்திப்பொன்று..

மாலி நாட்டின் ஐக்கிய நாட்டு படையின் கட்டளை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டெனிஷ் ஜிலேன்ஷ்போருக்கும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பானது இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பின் போது ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் பணிகளின் போது உயிரிழந்த இலங்கை அமைதி காக்கும் படையினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை முதலில் தெரிவித்த, டெனிஷ் ஜிலேன்ஷ்போர், இலங்கை அமைதி காக்கும் படையினரது சிறந்த சேவையை இராணுவ தளபதியுடன் பாராட்டினார்.

இலங்கை இராணுவ மின்சார பொறியியலாளர் படையணியின் படையணியினர் எதிர்காலத்தில் அமைதி காக்கும் பணிகளில் கவச வாகனங்கள் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபடவுள்ளதாகவும் அந்த கனரக வாகனங்களின் விளக்கங்களை இந்த மாலி நாட்டிற்கான ஐக்கிய நாட்டு சபையின் உயரதிகாரிக்கு இலங்கை இராணுவ மின்சார பொறியியலாளர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஏ.ஏ.டீ சிறினாக விளக்கமளித்தார்.

இந்த சந்திப்பின் போது சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி முகாமின் கட்டளை தளபதி பிரிகேடியர் பி.ஐ பத்திரத்ன, வெளிநாட்டு நடவடிக்கை பணியகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர் பதவியிலுள்ள லெப்டினன்ட் கேர்ணல் எம்.டப்ள்யூ.எஸ் மில்லேகல போன்றோர் கலந்துகொண்டனர்.

இறுதியில் இராணுவ தளபதியின் பணிமனையிலுள்ள பிரமுகர்களின் வருகையையிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் வருகை தந்த ஐக்கிய நாட்டுக்கான மாலிக் கட்டளை தளபதி கையொப்பமிட்டார்.

About Thinappuyal News