ஜனாதிபதியின் விசேட சுற்றறிக்கை

பொலிஸ் திணைக்களத்தை வரலாற்றில் முன்பென்றும் இல்லாது போல் பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால, சிறிசேன நாடுபூராகவும் உள்ள பொலிஸ் பிரிவுகளில் சட்டவிரோத மதுபானங்கள் கண்டு பிடிக்கப்படின் , அப்பகுதிகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பொறுப்பு கூற வேண்டும் என சுற்றறிக்கையொன்றை எதிர்வரும் வாரத்தில் வெளியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பொலனறுவையில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,

தற்போது நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் , பாதாள உலக நடவடிககைகள் மற்றும் குற்றச்செயல்கள் என்பன பாரிய அளவில் அதிகரித்துள்ளன. இந்த நிலையில்; நான் பொலிஸ் திணைக்களத்தை எனது பொறுப்பின் கீழ் எடடுத்து மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை .

ஆயீனும் , இந்த குறுகிய காலப்பகுதிக்குள் போதைப்பொருட்கள் , போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதள உலகின் முக்கிய புள்ளிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்படு வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த 30 வருடகாலங்களுக்கு அதிகமான காலங்கள் ஆட்சியில் இருந்தவர்கள் ,அமைச்சர்கள் இதுவரையில் போதைப்பொருளை நாட்டிலிருந்து இல்லதொழிக்க எத்தகைய நடவடிக்கைகளை |மேற்கொண்டனர் என்ற கேள்வி எழுகின்றது. பொலிஸ் பிரிவினர் முறையானக செயற்படுவதற்கு பொலிசாரை பொலிசாராக செயற்படும் வகையில் யாரும் பணியாற்றவில்லை என்பதே இதன் ஊடாக தென்படுகின்றது .

இருந்த போதிலும் , பொலிஸ் திணைக்களத்தை பொறுப்பெற்ற இரண்டரை மாதங்களுக்குள் நாட்டின் நீதி , நியாயம் என்பவற்றை நிலைநாட்ட பல்வேறு புதிய சட்டங்களை மற்றும் சட்ட திருத்தங்கள் என்பவற்றை கொண்டு வந்துள்ளேன் அதற்கமைய இனிவரும் காலங்களிலும் பொலிஸ் திணைக்களத்தில் மாற்றங்களை கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

About Thinappuyal News