மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் – பிமல் ரத்நாயக

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை இரத்து செய்ய முடியாவிடின் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் சவால் விடும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் என பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

மக்களாட்சி நடைமுறையில் உள்ள நாட்டில் அரசியல் அதிகாரங்கள் அனைத்தும் ஒரு தனிநபர் கையில் குவிந்து காணப்படும் பொழுது அங்கு  சர்வாதிகார ஆட்சியும், முறையற்ற அரசியலமைப்பு பயன்பாடுகளுமே இடம்பெறும். இதற்கு நாம் ஏனைய நாடுகளை ஒப்பிட தேவையில்லை. எமது நாட்டில் அரசியல் களத்தினையே ஒரு எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம் எனவும் குறிப்பிட்டார்.

About Thinappuyal News