நாட்டை 5 வருடத்தில் முன்னேற்றலாம் – பிரதமர்

அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தினால்  நாட்டை  ஐந்து வருட காலத்திற்குள் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலியில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தற்போது காணப்படுகின்ற மாறுபட்ட அரசியல் கருத்துக்களை விடுத்து  நாட்டின் எதிர்காலம் குறித்து அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.

About Thinappuyal News