சிவசக்தி ஆனந்தனின் கைக்கூலிகளாகச் செயற்பட்டவர்களே வவுனியாவில் தனித் தனிக் கட்சிகளையும், அமைப்புக்களையும் ஆரம்பித்துள்ளனர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினுடைய வன்னி மாவட்ட சிரேஸ்ட உறுப்பினருமாகிய சிவசக்தி ஆனந்தன் அவர்களின் கடந்த கால அரசியல் நிலைப்பாடுகளை எடுத்துக் கொண்டால் விடுதலைப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களை வடக்கிலும் கிழக்கிலும் எள்ளாளன், குளக்கோட்டன், மக்கள் படை, பண்டார வன்னியன் இன்னும் பல்வேறு புனைப்பெயர்களின் அரசுக்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். இவரால் பயிற்றுவிக்கப்பட்டவர்களே தற்பொழுது ஆளுக்கொரு கட்சியாகவும். கிரமாப்புறங்களில் பல்வேறு அமைப்புக்களையும் நிறுவி இருக்கின்றார்கள். இன்று இவர்கள் எம்பி.சிவசக்தி ஆனந்தனைவிடவும் அரசியல் படித்துவிட்டார்கள். எம்பி.சிவசக்தி ஆனந்தனுடைய பல்வேறு போராட்டங்களுக்கு முதன்மைவாரியாக செயற்பட்ட சமூகசெயற்பாட்டாளர் சன் மாஸ்டர் அவர்கள் இன்று தலைமறைவாகியுள்ளார். அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தை உருவாக்கியவரும் அவரே. அதனுடைய பின்புலத்தில் அனைத்து வளங்களையும் எம்பி. சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வழங்கியிருந்தார். அப்பொழுது வன்னிப் பிரதேசத்தில் இருக்கக் கூடிய ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொள்ளும் பலரும் அவருடைய சோற்றைத் திண்டு வளர்ந்தவர்கள் தான். ஆனால் இன்று அவர்கள் அவருக்கு எதிராகவே செயற்படுகின்றார்கள் என்பது கவலைக்குரிய விடயம்.
அண்மையில் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் லஞ்சம் பெற்றதாகவும் ஒரு செய்தி பரவலாக வெளிவந்தது. இதுவும் கூட இருந்த ஒருவரே அவருக்கு குழி பறித்த ஒரு விடயமாக இடம்பெற்றிருக்கின்றது. கொள்கை ரீதியாக எமது ஊடக நிலையத்திற்கும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சிக்கும் பல்வேறு முறுகல் நிலைகள் இருந்தாலும் எம்பி.சிவசக்தி ஆனந்தனுடைய அரசியல் நடவடிக்கைகள் பற்றி வெளிக்கொண்டுவரவேண்டிய தேவை தற்பொழுது ஏற்பட்டிருக்கின்றது. காரணம் என்னவென்றால் வன்னிப் பிரதேசத்தில் வாழுகின்ற மலையக மக்கள் குறித்து பல்வேறு கட்சியினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களும் கருத்துக்களை முன்வைக்கின்றார்கள். இவை ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்று.
வன்னியில் இருக்கக்கூடிய மலையகம் சார்ந்த மக்களை பிரித்தாளும் ஒரு நடவடிக்கையாக இன்று பலர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுடைய முகத்திரை மிகவிரைவில் கிழித்தெறியப்படும். இன மத மொழி வேறுபாடு இன்றி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் அரசியல் நகர்வுகள் அனைத்தும் எமது விடுதலையை வென்றெடுக்கவேண்டும் என்ற நோக்கிலேயே நகர்த்தப்பட்டு வந்திருக்கின்றது. தேசியம், சுயநிர்ணயம் என்று வாய் நிறையப் பேசிக் கொள்பவர்கள் அல்லது தேர்தல் காலத்தில் மட்டும் விடுதலைப்புலிகளின் தலைமை பற்றியும் அவர்களுடைய போராட்டம் பற்றியும் பேசுகின்றவர்கள் நன்கு சிந்திக்கவேண்டும். வெறும் தேர்தல் அரசியலை மையப்படுத்தியும், தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் வன்னி மக்களைக் காப்பாற்ற வந்த இறைதூதர்கள் என்று தங்களை வசைபாடுகின்றார்கள். இன்றைய அரசியல் சூழ்நிலையில் அன்று மௌனிகளாக அரசாங்கத்தின் உளவாளிகளாகச் செயற்பட்ட பலரும் தேசியம், சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுகின்றார்கள். ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினுடைய தலைமைகள் வேறு விதத்தில் அரசியலைக் கொண்டு சென்றாலும் வன்னி அரசியலைப் பொறுத்தவரையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு ஆதரவாக ஒரு கூட்டம் இருக்கின்றது. அவருடைய வாக்கு வங்கியைச் சரிப்பதென்பது மிகக் கடினம். போனஸ் ஆசனம் மூலம் வவுனியா நகரசபையைக் கைப்பற்றிய ஒரு அரசியல் இராஜதந்திரி அவர்.
முஸ்லீம் தலைமைகளுக்கு இவர் ஒரு சிம்ம சொப்பனமாக இப்பொழுதும் இருக்கின்றார். வன்னியைப் பொறுத்தவரையில் இருந்த ஆயுதக்கட்சிகள் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவற்றில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தினாலும் அவர்களுடைய தமிழ் குடியேற்றங்களினாலேயே வவுனியாவில் பல்வேறு இடங்களில் சிங்களக் குடியேற்றங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே மலையக மக்களை இரட்சிக்க வந்தோம் என்று கூறுகின்ற அரசியல்வாதிகளும், வன்னி மண்ணில் புதிதாக முளைத்திருக்கின்ற அரசியல் பிரமுகர்கள், உங்களின் அரசியல் வளர்ச்சிக்கு உதவி செய்த குறித்த பாராளுமன்ற உறுப்பினரை விமர்சனம் செய்யாது உங்களது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டால் அதுவே சிறந்தது. ‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்ய ஒருபோதும் எத்தனிக்காதீர்கள்.’

About Thinappuyal News