போதை பொருள் கடத்தலும் மன்னார் கரையோரமும்

16
2009 ஆண்டு இறுதி யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் பூதாகரமாக எழும்பியுள்ள பிரச்சினை போதை பொருள் கடத்தல் மற்றும் போதை பொருள் பாவனையே
வடக்கு கிழக்கு பகுதிகளின் ஊடக கடந்த 5 வருடங்களில் அதிகலவான போதை பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றது அதிலும் குறிப்பாக கேரள கஞ்சா களங்சியம் என்று வர்ணிக்கும் அளவிற்கு மன்னார் மாவட்டத்தின் ஊடக அதிகளவான போதை மாத்திரைகள் கஞ்சா ஹெரோயின் ஹொக்கைன் பீடி சுற்றும் இலைகள் என சட்ட விரோதமான அனேகமான பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றது
இவ்வாறான கடத்தல்கள் எவ்வாறு மன்னார் மாவட்டத்தின் ஊடாக சாத்தியப்படுகின்றது என நோக்கும் இடத்தில் மன்னார் மாவட்டத்தின் தீவகபகுதிகளிளும் பெரும் நிலப்பரப்பில் உள்ள சில கரையோர பகுதிகளில் இருந்தே அனேகமான போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன
மன்னார் தீவக பகுதியானது நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு காணப்படுவதனால் அயல் நாடுகளில் இருந்து நேரடியாக போதை பொருட்களை உள்நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார் பேசாலை வங்காளை தாழ்வுபாடு எருக்கலம்பிட்டி  சிலாவத்துறை பள்ளிமுனை ஆகிய கடற்பரப்புக்களினூடகவே அதிகம் போதை பொருட்கள் எடுத்துவரப்படுவதுடன் இங்கிருந்து தென் பகுதிகும் அதே போன்று உள்ளூர் பகுதிக்கும் விற்பனை செய்யப்படுகின்றது கவலைக்குறிய விதமாக மன்னார் மாவட்டத்தில் கரையோர பிரதேசங்களில் அதிகளவிலான மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடைவிலகுவதற்கும் போதை பொருட்களுக்கு அடிமை ஆகுவதற்கும் சட்டவிரோதமான இவ் போதை பொருள் கடத்தலுடன் தொடர்புபட்ட தொழிகளில் ஈடுபடுவதற்கும்  இவ் போதைபொருள் வர்த்தகம் காரணமாக அமைகின்றது
குறித்த கடல் பிரந்தியத்தில் இருந்து அதிகளவிலான போதைபொருட்கள் அன்றாடம் கடத்தப்பட்டாலும் அவற்றில் மிகச்சிறிய அளவே பொஸிசார் மற்றும் கடற்படையினரால் கைப்பற்றபடுகின்றது மிகுதி பாரியளவிலான போதைபொருட்கள் அனைத்தும் விற்பனை முகவர்கள் மூலமாக தென் இலங்கை பகுதிக்கு அனுப்பப்படுகின்றது
அதிகளவிலான வருமானம் கிடைக்காத தொழிளாலர்களை குறிவைத்து  தங்கள் பரிவர்த்தனைகளுக்கும் கடத்தல்களுக்கும் பயன்படுத்தும் பெரு முதலாளிகள் தங்களை வெளியில் அடையாளம் காட்டிகொள்வதில்லை மாறாக தங்களின் இடைத்தரகர்களான மூன்றாம் நான்காம் நிலை இடைத்தரகர்கள் மூலமே அனைத்து விதமான உடன்பாடுகள் பண பரிவர்தனைகளை மேற்கொள்கின்றனர்
பெரும்பாலும் இந்த போதை பொருட்கடத்தல்களின் போது கைது செய்யப்படுபவர்களும் இவ்வாறன ஒரு சில ஆயிரங்களிக்கு வேலை செய்பவர்களும் மூன்றாம் நான்காம் நிலை இடைதரகர்கலே ஆகும்
அதிகளவிலான போதை பொருட்கடத்தல்கள் அதிகாலை நேரங்களிலே இடம் பெறுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது காலை 1 தொடக்கம் 3 மணி வரையான நேரத்தை மைய்யப்படுத்தியே போதை பொருட்கள் கரைக்கு கொண்டுவரப்படுகின்றன ஆளம் அற்ற கடல் பரப்பினூடாக கொண்டு வரப்படுகின்ற போதை பொருட்கள் அருகில் உள்ள புதர்கள் பற்றைகள் அல்லது பாதுகாப்பான இடத்தில் பதுக்கப்படுகின்றன பதுக்கப்பட்டு ஒரு சில நாட்களின் பின்னரே வெளி வியாபரத்திற்காக வெளியே எடுக்கப்படுகின்றது
 இலங்கைக்கான அதிகளவான போதை பொருட்கள் இந்தியாவின் கேரளா தமிழ்நாட்டு தனுஸ்கோடி இராமேஸ்வரம் பகுதிகளில்  இருந்தும் பாக்கிஸ்தானில் இருந்துமே கிடைக்கபெறுகின்றது அனேகமாக பாரிய அளவிலான போதை வர்த்தகமானது பொதுகடல் எல்லைகளில் பாரிய கப்பல்களில் இருந்தே நடைபெறுகின்றது ஒரு தொகுதி ஆபத்தான போதைபொருளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு ஒரு வார காலப்பகுதிக்கும் மேல் தேவைப்படுகின்றது பெரும்பாலும் ஆபத்தான தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் கற்பிட்டி கடற்கரை பிரதேசத்தை அண்டிய கடற்பரப்பில் இருந்து கொண்டுவரப்படுகின்றது
 புPளு கருவிகள் மூலம் குறிக்கப்பட்டிருக்கும் கடல் பகுதிக்கு உள்ளூர் முகவர்களில் வேலை ஆட்கள் படகுகள் மூலம் பயணிக்கும் போது அங்கே நிறுத்துவைக்கப்பட்டிறுக்கும் போதை பொருள் கடத்தல் கப்பல்களில் இருந்தே போதை பொருட்கள் இலங்கை போதை பொருள் விற்பனை முகவர்களுக்கு கிடைக்க பெறுகின்றது
 மீனவர்கள் போன்று கடலுக்கு சென்று கடல் பாதைகள் மூலம் பெறப்படும் போதைபொருட்களை கடற்கரை வரை சேர்ப்பதற்கு ஒரு பகுதியினறும் கடல் பகுதியில் இருந்து நகர்பகுதி மற்றும் வர்தக முகவர்களுக்கு கொடுப்பதற்கு  இன்னொறு பகுதியினரும் செயல்படுகின்றனர்  அவ்வாறு வெற்றிகரமாக போதை பொருள் முகவரிடம் கையளிக்கப்படும் பட்சத்தில் சாதாரண போதை பொருட்களுக்கு ஐம்பதாயிரம் தொடக்கம் ஒருலட்சம் வரையிலும் ஆபத்தான போதைபொருளுக்கு நபர் ஒருவருக்கு ஒன்று தொடக்கம் மூன்று லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் கிடைக்கப்பெருவதினாலே அதிகளவிலான இளைஞர்கள் மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் இவ்வாறன சட்ட விரோத தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்
அதைவிட தற்போதய கைதுகளின் அடிப்படையில் நோக்கும் இடத்து போதைபொருள் வர்தகர்களுக்குள் காணப்படும் உள்ளக முரண்பாடுகள் காரணமாகவே அதிகளவான போதை பொருட்கள் கைப்பற்றப்படுக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும் காவற்துறை மற்றும் கடற்படையினருக்கும் வழங்கப்படும் இரகசிய தகவலின் அடிப்படையிலே அனேகமான போதை பொருள் கடத்தல்கள் முறியடிக்கப்படுகின்றன போதை பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டார்கள்
இதுவரை மன்னார் மாவட்ட கடற்பரப்புக்குள் பல லட்சம் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் இந்திய கேரள பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட கஞ்சா பீடிசுற்றும் இலைகள்  ஹெரோயின் என பல தடை செய்யப்பட்ட போதைபொருட்கள் கடற்கறையில் பனைமர உச்சியில் மணலில் புதைக்கப்பட்டு புதர்களுக்குள் மறைக்கப்பட்டு கடத்தல் வாகனங்களில் வைத்து மதஸ்தல பகுதிகளுக்குள் வைத்து நேரடி தகவல்கள் மூலமும் இரகசிய தகவல்கள் மூலமும் கைப்பற்றாப்பட்டுள்ளது
இவ்வாறான பல கைதுகள் இடம் பெற்றாலும் போதை பொருள் கடத்தல் தற்போதும் அதிகாளவில்   இடம் பெற்றுவருகின்றது அதற்கான காரணம் போதை பொருள் முகவர்கள் ஒரு சிறிய அளவிலான போதை பொருள்கடத்தலை இரகசிய தகவல் மூலம் பொலிஸார் மற்றும் கவல்துறையினறுக்கு வழங்கி விட்டு ஒட்டு மொத்த பார்வையும் அந்த சிறிய அளவிலான கடத்தலை உற்று நோக்கும் போது வேறு பாதையினூடாக பெரிய அளவிலான கடத்தல்களை அரங்கேற்றுகின்றார்கள் இவ்வாறன சம்பவங்கள் எல்லா நேரங்களிலும் இடம் பெறாவிட்டாளும் அதிகமாக இடம் பெறுகின்றது
அதே போன்று 24 மணி நேர கடற்படையின் ரோந்து பணிகளின் மத்தியில் கடற்படையின் உதவி இல்லாமல் இப்படியான கடத்தல்கள் இடம் பெற வாய்ப்பில்லை என சில சமூக ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர் அதே நேரத்தில் யுத்தகாலத்தில் காணப்பட்டது போன்று சோதனை சாவடிகள் காணப்படாததும்  இவ்வாறன கடத்தல்கள் அதிகளவில் இடம் பெறுவதற்கு சாதகமாக அமைகின்றது
தொடர்ச்சியான இவ்வாறன சில சுயநல வர்தகர்களாலும் கடத்தல்காரர்களாலும் கடத்தல்கள் இடம் பெறுவதனதல் அதிகளவிலான பாரம்பரிய மீனவகிராமங்கள மற்றும்; மீனவர்கள் சழூக ரீதியில் பிரித்து நோக்கப்பட்டும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்ப்படும் ஆபத்தும் காணப்படுகின்றது இவ்வாறான தொடர்சியான கடத்தல்கள்  ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஆரோக்கியமானது அல்ல கரையோர போதை பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான நடைமுறை சாத்தியமான செயற்பாடுகளை மேற்கொள்ளாத விடத்து போதை பொருள் வர்தகம் நிறுத்த முடியாத சாபகேடாக தொடர்ந்து கொண்டே இருக்கும்

(ஜோசப் நயன்)
SHARE