தீ பரவலில் 18 பேர் பலி

இந்தியா- புதுடில்லி ஹோட்டலில்  ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ பரவலால் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டில்லியில், கரோல் பாக் பகுதியிலுள்ள அர்பித் பெலஸ் என்ற நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை 4.35 மணியளவில் குறித்த தீ பரவியுள்ளது.

குறித்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குறித்த விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என டில்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை டில்லி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

About Thinappuyal News