விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இதில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கிறார்.
தென் தமிழகம் மற்றும் கேரளாவில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு வடஇந்தியாவில் நடந்தது. இந்த நிலையில், படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக இயக்குநர் சீனு ராமசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டப்பிங் பணிகள் விரைவில் துவங்கவிருப்பதாகவும், இசைஞானியின் இசையை கேட்க ஆவலோடு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் இந்த படத்தை தயாரிக்கிறார்.

About Thinappuyal News