இலங்கை குறித்த புதிய தீர்மானம் சமர்ப்பிப்பு

ஜெனீவாவில் இடம்பெறவுள்ள மனித உரிமை பேரவையின் அமர்வில் இலங்கை குறித்த புதிய தீர்மானமொன்றை இலங்கை விவகாரத்தை கையாளும் முக்கிய நாடுகள் சமர்ப்பிக்கவுள்ளன என பிரிட்டன் தெரிவித்துள்ளது

திங்கட்கிழமை இடம்பெற்ற மனிதஉரிமை பேரவையின் கூட்டமொன்றில் ஜெனீவாவிற்காக பிரிட்டனின் தூதுக்குழு இதனை தெரிவித்துள்ளது

இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மனித உரிமைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான தீர்மானமொன்றை கனடா ஜேர்மனி மசெடோனியா மொன்டினீக்ரோ பிரிட்டன் ஆகிய நாடுகள் சமர்ப்பிக்கவுள்ளன என  பிரிட்டன் தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகளிற்கான பிரிட்டனின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி யூலியன் பிரத்வைட்  தெரிவித்துள்ளார்

இலங்கை தொடர்பான முக்கிய குழு இலங்கையுடன் இணைந்து செயற்படும 2015 இல் ஆரம்பமான ஒத்துழைப்பை பேணமுயலும் எனவும் தெரிவித்துள்ள பிரிட்டன் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை  நடைமுறைப்படுத்த முயலுவோம் எனவும் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் சமர்ப்பிக்கவுள்ள தீர்மானம் 2015 இல் மனித உரிமை ஆணைக்குழு ஏற்படுத்திய செயல்முறையை தொடர்ந்தும் மேலும் நீடிக்க முயலும் எனவும் பிரிட்டன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாங்கள் உத்தியோகப்பற்றற்ற பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ள பிரிட்டன் புதிய தீர்மானத்திற்கு மனித உரிமை பேரவையின் முழுமையான ஆதரவை பெறமுயலப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளதை தொடர்ந்து இலங்கை விவகாரத்தை கையாளும் பொறுப்பை பிரிட்டன் ஏற்றுக்கொண்டுள்ளது.

About Thinappuyal News