புத்தளம் – குதிரமலை கடற்பரப்பில் நால்வர் கைது

கடற்றொழில் அனுமதி பத்திரமின்றி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நான்கு பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

புத்தளம் – குதிரமலை கடற்பரப்பில் நேற்றைய தினம் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள படகு மற்றும் தடை செய்யப்பட்டுள்ள வலைகளும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Thinappuyal News