ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

உடலில் ஏராளமான மாற்றங்களை உண்டாக்க வேண்டுமென்றால் அதற்கு பூண்டும் ரெட் ஒயினும் அவசியம் என சொல்லப்படுகின்றது.

பூண்டுடன் ரெட் ஒயின் சேர்வதால் உடலுக்கு ஏராளமான நன்மைகளை அள்ளி தருகின்றது.

இந்த அருமருந்தை சாப்பிட்டு வருவதால் உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.

மேலும் இது தொப்பை பிரச்சினை இதய நோய்கள் உருவாவதையும் தடுத்து விட கூடிய வல்லமை படைத்தது.

தேவையானவை
  • பூண்டு 12 பற்கள்
  • ரெட் ஒயின் அரை லிட்டர்
  • கண்ணாடி ஜார் 1
செய்முறை

முதலில் பூண்டின் தோலை நீக்கி சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். பிறகு இதனை கண்ணாடி ஜாரில் போட்டு ரெட் ஒயினை சேர்க்கவும்.

இதன் மூடியை இறுக மூடி கொண்டு சூரிய ஒளி மிதமாக இருக்கும் இடத்தில் 2 வாரம் வைத்து கொள்ள வேண்டும். தினமும் இந்த ஜாரை குலுக்கி குலுக்கி வைக்கவும்.

இரண்டு வாரம் கழித்து இந்த கண்ணாடி ஜாரில் இருக்கின்ற ரெட் ஒயின் மற்றும் பூண்டின் கலவையை கண்ணாடி பாட்டிலுக்கு மாற்றவும். இப்போது இதனை சூரிய ஒளி படும் இடத்தில் வைப்பதற்கு பதிலாக ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும்.

இந்த கலவையை ஒவ்வொரு நாளும் 3 முறை 1 ஸ்பூன் அளவிற்கு சாப்பிட்டு வரலாம். 1 மாத காலம் இப்படி சாப்பிட்டு வந்தால் இதனால் உண்டாகும் மாற்றங்களை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள். 1 மாதத்தில் 1 நாள் கூட இதை சாப்பிடாமல் இருக்க கூடாது.

வேறு நன்மைகள்
  • நீண்ட நாட்களாக உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த பூண்டு மற்றும் ஒயின் கலவை உதவுகிறது.
  • சிறுநீரகம், பெருங்குடல் பகுதி, மேலும் சில முக்கிய உறுப்புகளில் சேர்ந்துள்ள அழுக்குகள் முழுவதையும் இது வெளியேற்றி விடும்.
  • ரெட் ஒயின் மற்றும் பூண்டில் இவற்றில் ஆன்டி பையோட்டிக், ஆன்டி ஆக்சிடன்ட், அத்துடன் புற்றுநோயையும் தடுக்கும் தன்மை இதற்குண்டு.
  • இந்த கலவையை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலமாக எதிர்ப்பு சக்தி குறைபாடு நீங்கும். உடலில் உள்ள அதிக உப்பை குறைத்து உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை இதற்குண்டு. கூடவே இரத்த ஓட்டத்தையும் இந்த கலவை சீராக வைத்து கொள்ளும்.

About Thinappuyal News