குழந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய தாய்

அமெரிக்கப் பெண் ஒருவர், தனது குழந்தை கடத்தப்பட்டதாக பொலிசில் புகாரளித்திருந்த நிலையில், தானே தன் குழந்தையை கொன்று விட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த Nakira Griner (24), தன்னை ஒருவர் தாக்கி விட்டு தனது குழந்தையை கடத்திச் சென்று விட்டதாக பொலிசில் புகாரளித்தார்.

மோப்ப நாய்கள் உதவியுடன் பொலிசார் தேடுதல் வேட்டையில் இறங்க, Nakiraவின் வீட்டின் பின்பக்கத்திலேயே எரிந்த நிலையில் அந்த குழந்தையின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளன.

சந்தேகம் வலுக்க, பொலிசார் Nakiraவை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

விசாரணையில் Nakira முன்னுக்குப்பின் முரணாக உளற, உண்மை அறியும் கருவியின் உதவியுடன் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அவர் பொய் கூறியது தெரியவந்தது.

பின்னர் பொலிசார் முறைப்படி விசாரிக்க, Nakira கூறிய விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தனது 23 மாதக் குழந்தை Daniel Griner, தான் சொல்வதைக் கேட்பதில்லை என்றும், சாப்பிட அடம்பிடிப்பதாகவும் கூறிய Nakira, அதனால் தான் குழந்தையை தாக்கியதாகவும், படிக்கட்டுகளில் உருண்ட குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் குழந்தையை துண்டு துண்டாக வெட்டி சில பாகங்களை எரித்து, சிலவற்றை தோட்டத்தில் மறைத்து, சில துண்டுகளை தனது பர்ஸிலேயே மறைத்து வைத்துள்ளார் Nakira.

Nakiraவைக் கைது செய்துள்ள பொலிசார், நாளை மறுநாள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Nakira மீது கொலை, குழந்தையின் நலனுக்கு ஊறு விளைவித்தது, மனித உடல் பாகங்களை மரியாதை குறைவாக நடத்தியது மற்றும் ஆதாரங்களை அழிக்க முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

About Thinappuyal News