வடிகானுக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தை

9

தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் வீதியோரம் உள்ள வடிகானுக்குள் இருந்து  குழந்தையொன்றை குறித்த  வீதியில் நடந்து சென்றவர் கண்டெடுத்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

அப்போது வடிகானுக்குள்ஆழத்தில் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்ததை உணர்ந்தார். உடனடியாக அவசர உதவி எண்ணுக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்த மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

சுத்தியல் மற்றும் உளிகள் கொண்டு குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிகானை மெதுவாக தோண்டினர். 3 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தையை பாதுகாப்பாக மீட்டனர்.  மீட்கப்பட்ட குழந்தை டர்பனில் உள்ள இன்கோசி ஆல்பர்ட் லுத்துளி வைத்தியசாலையில் அனுமதி செய்யப்பட்டுள்ளது.

அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறும்போது, குழந்தையின் உடலில் லேசான காயங்கள் மற்றும் வெட்டுகள் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை எனவும் தெரிவித்தனர். இந்நிலையில் குழந்தையின் பெற்றோரை கண்டறிய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளளமை குறிப்பிடத்தக்கது.

SHARE