பாதுகாப்பாக உயிரோடுதான் இருக்கிறேன் – சுரேஷ் ரெய்னா

20

கடவுள் அருளோடு நான் பாதுகாப்பாக உயிரோடுதான் இருக்கிறேன் என சுரேஷ் ரெய்னா, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்திய அணியின் நடுத்தர வரிசை வீரரான சுரேஷ் ரய்னா கார் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார் என கடந்த சில நாட்களாக வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இது குறித்து சுரேஷ் ரய்னாவுக்கு தினந்தோறும் தொலைபேசியில் நண்பர்கள் விசாரிக்க ஆரம்பித்தனர். இந் நிலையில் தான் பாதுகாப்பாக உயிரோடுதான் இருக்கிறேன் என ரய்னா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,

‘‘கடந்த சில நாட்களாக நான் கார் விபத்தில் இறந்துவிட்டதாக போலியான செய்தி வந்த வண்ணம் உள்ளது. இது என்னைக் காயப்படுத்தியுள்ளது. இது எனது குடும்பத்தையும், நண்பர்களையும் மிகுந்த கவலையடையச் செய்துள்ளது.

இதுபோன்ற செய்திகளை புறக்கணியுங்கள். கடவுள் அருளோடு நான் நன்றாக இருக்கிறேன். அத்துடன் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ள தவறான காட்சிகளை நீக்குமாறு புகார் அளித்துள்ளேன்.

இதுதொடர்பாக விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

SHARE