திருமண நாளன்றே, யுவ­தி­யொ­ரு­வரை துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­ய மணமகன்..

திரு­மண வைப­வத்­தின்­போது, யுவ­தி­யொ­ரு­வரை பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தி­ய­தாக அமெ­ரிக்­காவைச் சேர்ந்த இளைஞர் ஒரு­வ­ருக்கு எதி­ராக வழக்குத் தொடுக்­கப்­பட்­டுள்­ளது.

பென்சில் ­வே­னியா மாநி­லத்தைச் சேர்ந்த மத்­தியூ அய்மர்ஸ் என்­ப­வ­ருக்கு எதி­ரா­கவே இவ்­வ­ழக்குத் தொடுக்­கப்­பட்­டுள்­ளது.

இவரின் திரு­மண வைபவம், கடந்த நவம்பர் மாதம், பில­டெல்­பியா நக­ரி­லுள்ள விடு­தி­யொன்றில் நடை­பெற்­றது.

ஆனால், திரு­மணம் முடிந்து சில­ம­ணித்­தி­யா­லங்­களில் மண­மகன் மெத்­தியூ அய்மர்ஸ் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டார்.

அவ்விடு­தியில் பணி­யாற்­றிய, பதின்ம வயது யுவ­தி­யொ­ரு­வரை அவர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தினார் என்ற குற்­றச்­சாட்டே இதற்குக் காரணம்.

31 வய­தான மத்­தியூ அய்­மர்­ஸுக்கு எதி­ரான குற்­றப்­பத்­தி­ரிகை கடந்த வாரம் கைய­ளிக்­கப்­பட்­டது. குறித்த யுவ­தியை பின்­தொ­டர்ந்து சென்று கழி­வ­றையில் வைத்து பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தினார் என அய்மர்ஸ் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

எய்மர்ஸ் மீதான குற்­றச்­சாட்­டு­களை அவரின் சட்டத்தரணி நிராகரித்துள்ளார்.

About Thinappuyal News