டுவிட்டை நீக்கிய விராட் கோஹ்லி

27

இந்திய வீரர்கள் 46 பேர் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்ததற்கு இந்தியர்கள் உட்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய விளையாட்டு வீரர்களும் தங்களது கண்டனத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்திய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, அதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்காமல், விளையாட்டு வீரர்களுக்கான விருது குறித்தும், அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என டுவிட் செய்துள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர், ஒட்டுமொத்த தேசமே சோகத்தில் இருக்கையில் உங்களது பெருமையை பறைசாற்றுகிறீர்கள்,

வெட்கமாக இருக்கிறது என திட்டியதையடுத்து, அந்த டுவிட்டை விராட் கோஹ்லி நீக்கியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

 

 

SHARE