5 விக்கெட்டுக்கள் எடுத்த எம்புலுதெனிய

8

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 304 ஓட்டங்களை இலங்கை அணிக்கு  வெற்றியிலக்காக நிர்ணயித்துள்ளது.

தென்னாபிரிக்க – இலங்கை அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 13 ஆம் திகதி டர்பனில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு தென்னாபிரிக்க அணியை பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை குவித்தது. பதிலுக்கு இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களை பெற்று சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

இதனால் 44 ஓட்ட முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி நேற்றைய போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம நேர முடிவில் தென்னாபிரிக்க அணி 124 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

இந் நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 259 ஓட்டங்களை பெற்றது.

இதன் மூலம் இலங்கை அணியின் வெற்றிக்கு 304 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில் மக்ரம் 28 ஓட்டத்தையும், எல்கர் 35 முறையிலும், அம்லா 16 ஓட்டத்தையும், பவுமா 3 ஓட்டத்தையும், டூப்பிளஸிஸ் 90 ஓட்டத்தையும், டீகொக் 55 ஓட்டத்தையும், பிலேண்டர் 18 ஓட்டத்தையும், மஹாராஜ் 4 ஓட்டத்தையும், ரபடா டக்கவுட் முறையிலும், ஸ்டெய்ன் ஒரு ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், ஒலிவர் 2 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் லஷித் எம்புலுதெனிய அசத்தலாக பந்து வீசி 5 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்ணான்டோ 4 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித ஒரு விக்கெட்டுனையும் வீழ்த்தினர்.

SHARE