இந்திய அணியின் டி20 போட்டியில் மார்கண்டே

5

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியின் டி20 போட்டியில் இளம் வீரரான மயங்க் மார்கண்டே சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா அணி இரண்டு டி20 மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது.

இதில் டி20 அணியில் மயங்க் மார்கண்டே சேர்க்கப்பட்டுள்ளார், வலக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர் கூக்ளி பந்துவீச்சில் சிறந்தவர்.

2018ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக விளையாடி 15 விக்கெட்டுகளை சாய்த்தார், அதில் டோனியின் விக்கெட்டும் அடக்கம்.

சமீபத்தில் கூட இங்கிலாந்து அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்டில், 5 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

இந்நிலையில் முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கும் மயங்க் மார்கண்டே மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE