சர்வதேச டென்னிஸ் போட்டி சம்பியனானார் மெர்டென்ஸ்

மெர்டென்ஸ் 3–6, 6–4, 6–3 என்ற செட் கணக்கில் ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்து சம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

கட்டார் பகிரங்க பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி டோகாவில் நடந்தது.

இதில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனும், 3 ஆம் நிலை வீராங்கனையுமான ருமேனியாவசை் சேர்ந்த சிமோனா ஹாலெப், தரவரிசையில் 21 ஆவது இடத்தில் உள்ள பெல்ஜியத்தைச் சேர்ந்த எலிஸ் மெர்டென்சை சந்தித்தார்.

இதில் முதல் செட்டை ஹாலெப் தனதாக்கினார். இந்த செட்டின் போது முதுகுவலியால் அவதிப்பட்ட மெர்டென்ஸ், சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆட்டத்தை தொடர்ந்தார்.

அடுத்த இரு செட்டுகளில் எழுச்சி பெற்ற மெர்டென்ஸ் 3–6, 6–4, 6–3 என்ற செட் கணக்கில் ஹாலெப்புக்கு அதிர்ச்சி அளித்து சம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார்.

இந்த ஆட்டம் 2 மணி 13 நிமிடங்கள் நீடித்தது.

23 வயதான எலிஸ் மெர்டென்ஸ், தனது டென்னிஸ் வாழ்க்கையில் வென்ற மிகப்பெரிய சாம்பியன் கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News