இலங்கை கிரிக்கெட் அருங்காட்சியகம் திறப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ”கிரிக்கெட் அருங்காட்சியகம்” ஒன்றை திறந்து வைத்துள்ளது.

குறித்த கிரிக்கெட் அருங்காட்சியகமானது இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கு அருகில் திறக்கப்பட்டுள்ளது.

மேற்படி அருங்காட்சியகத்தில் இலங்கை கிரிக்கெட்டின் மிக முக்கியமான கிரிக்கெட் ‘தருணங்கள்’ மற்றும் ‘திருப்பு முனைகள்’ கிரிக்கெட் பயணம் ஆகியன இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கிரிக்கெட் அருங்காட்சியகத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இந்த கிரிக்கெட் அருங்காட்சியகம் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும்.

அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு இலவச நுழைவுச்சீட்டு வழஙக்கப்படவுள்ளதுடன் இது எதிர்கால தலைமுறையினர் கிரிக்கெட் விளையாட்டை பின்பற்ற உத்வேகமளிக்கும் ஒரு நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News