23 சிக்சர்கள் அடித்து வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை

23 சிக்சர் அடித்து வெஸ்ட் இண்டீஸ் புதிய சாதனை

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 23 சிக்சர்கள் அடித்தது. இது புதிய சாதனையாகும். ஒரு நாள் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச சிக்சர் ஆகும். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நியூசிலாந்து 22 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்த வெஸ்ட் இண்டீஸ் புதிய சாதனை நிகழ்த்தியது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல் 12 சிக்சர்களும், பிராவோ 4 சிக்சர்களும், ஆஸ்தரே நர்ஸ் 3 சிக்சர்களும், கேப்பெல், ஹோப், ஹெட்மயர், தேவேந்திர பிஷூ தலா ஒரு சிக்சரும் அடித்தனர்.

About Thinappuyal News