சாதனைகள் பல படைத்து தரணியில் தலை நிமிர்ந்து வாழ இனிய மகளீர் தின வாழ்த்துகள்

ஒவ்வொரு வருடமும் மார்ச் 8–ம் நாள் உலகம் முழுவதும் மகளீர் தினம் கொண்டாடப்படுகிறது. இனம், மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இத் தினம் ஆரம்பத்தில் ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் வழங்க வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து கொண்டாடினாலும்; பிற்காலத்தில் அவ்வப்போது பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளை, அவமானங்களை முன்வைத்து உலக நாடுகளில் பல்வேறுபட்ட தொனிப்பொருளில்  கொண்டாடி வருகின்றார்கள். மான்புறும் மங்கையை போற்றுவோம்.

ஒவ்வொரு வருடமும் வரும் மகளிர் தினம் இம் முறையும் வந்து போனது ஆங்காங்ககே மகளிர் தின எழுச்சிகள் மாநாடுகள் இடம் பெற்றன. ஆனால் பெண்களின் நிலை? வரலாறுகளை எடுத்து நோக்குவோமாக இருந்தால் உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்ற நாடு எமது இலங்கை ஆகும். 1970க்கு முன்னர் வடபகுதி பெண்ணினம் அடுப்பங்கரை தவிர வேறு உலகம் எதும் இல்லை என்ற நோக்கோடு தமது வாழ்க்கையை நடத்தி வந்தனர். பெண்ணடிமை என்பது வடபகுதியை இலக்கு வைத்திருந்த காலப்பகுதி அது. 1978 பின்னர் வட பகுதியில் ஆயுதப்போராட்டம் வீறுக்கொண்டெழுந்த பின்னர், ஆயுத போராளிகள் குறிப்பாக விடுதலைப்புலிகள், ஈழ மக்கள் புரட்சிகர முண்னனி போன்ற அமைப்புகள் பெண்களை தமது போராட்டத்தில் இணைத்துக்கொண்டன.  விடுதலைப்புலிகள் மகளீர் அணி பல வீரமிகு சாதனைகளை படைத்தது. பெண்கள் பலதுறைகளிலும் சாதனைகள் படைத்த காலப்பகுதியாகும். 2009 ஆயுத போராட்டம் மௌனித்த பின்னர், பெண்கள் சந்திக்கும் சோதனைகள் பல. குறிப்பாக யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் அல்லது கொல்லப்பட்ட தமது குடும்ப தலைவர்கள் இன்றி வாழப் பெண்கள் படும் துயர் சொல்ல முடியாத நிலை, பாலியல் ரீதியாக அவர்கள் படும் நிலை, ஆண்களின் தவறான பார்வைகள், உறவுகளின் கொடுமைகள் இவ்வாறு  பல துன்பங்களை சந்தித்து வருகின்றனர்.

வேலைவாய்ப்புகளுக்கு அரபு நாடு செல்லும்  பெண்களும் இவ்வாறான நிலையை சந்திக்கின்றனர். பெண்களுக்கு 50%வீதத்துக்கு சமவுரிமை என்று சொல்லிக்கொண்டிருக்கின்றோம். தவிர இதுவரை அவ்வாறான எதுவும் இடம்பெறவில்லை. கிராமப்புறங்களில் பெண் பிள்ளை கூட இன்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகின்றனர். மகளிர் அமைப்புகள் இது சம்மந்தமான ஆக்கப்பூர்வ செயற்பாட்டில் ஈடுபடவேண்டும் என்றே சொல்ல வேண்டும். பெண்கள்
சமுதாயத்தில் எழுச்சிப்பெற்று வரவேண்டுமாயின் ஆண்களின் மனநிலை முற்றாக மாற வேண்டும். பெண்களும் தமது சுயகௌரவத்துடனும் வீரத்துடனும் எழுச்சிப்பெற்று வரவேண்டும் என்பதுடன் பெண்ணடிமைத்தனத்தை உடைத்து வரவேண்டும் என்பதே இம் மகளீர் தின அறைகூவல் ஆகும். அனைவரும் இவ்வுலகில் சம உரிமைகளைப் பெற்று வாழவேண்டும் அத்துடன் அனைத்துப் பெண்களுக்கும் மகளீர் தின வாழ்த்துக்களையும் தினப்புயல் ஊடகம் தெரிவித்துக்கொள்கிறது.

 

About User2