மது போதையில் வாகனம் செலுத்திய 222 சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மது போதையில் வாகனம் செலுத்திய 222 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய குறித்த விஷேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.