கத்தோலிக்க பதினேழு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் சில போப்புகள் கொலை

 

கத்தோலிக்க பதினேழு நூற்றாண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் சில போப்புகள் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். சில போப்புகள் கொலைகளைத் தூண்டி இருக்கிறார்கள். பலர் ஏழை எளியோரின் உழைப்பின் மீதும், பணத்தின் மீதும் தங்களின் சுகபோக வாழ்க்கையை அமைத்திருக்கிறார்கள். ஆதி அப்போஸ்தலர்கள் காலத்திற்குப் பிறகு உருவாகிய போப்மார்க்கம் அதிகார ஆதிக்க அரசியல் ஆட்சியாக மாறியது.

போப் இன்னசென்ட் lll (கி.பி 1198-1218 ) என்பவர் கத்தோலிக்க எதிர்ப்பாளர்கள் திருச்சபை நீதிமன்றத்தின் மூலம் விசாரித்து கடுமையாக தண்டனைகளை வழங்கினார். இந்த நீதிமன்றம் 500 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கியது. கத்தோலிக்க எதிர்ப்பாளர்கள் இந்த விசாரணையின் போது கடுமையாக சித்திரவதைகளுக்கு ஆளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். கத்தோலிக்க எதிர்ப்பு இயக்கம் (புராட்டஸ்டன்ஸ்) தோன்றிய காலக்கட்டத்தில் சுமார் 9 லட்சம் கிருஸ்தவர்கள் கொலை செய்யபட்டனர் ( Night Journey from Rome, Page 54, 101,102 )

மேரியை தேவமாதாவாக வணங்கும்படி செய்யும் போதனைகளுக்கு எதிப்பு தெரிவித்த கத்தோலிக்க பிஷப் நெஸ்டோரியஸ் என்பவரையும், அவரது ஆதரவாளர்களையும் மதத்துரோகிகள் என்று கண்டனம் செய்து திருச்சபையை விட்டு போப்பாதிக்கம் வெளியேற்றியது ( General Council of the Church Page 25,31 ).

தேவனுடைய பத்துக்கட்டளைன்படி வாழ வேண்டும் என்று போதித்த மணிக்கீஸ் என்ற மார்க்கத்தினரும் (கி.பி.3-ம் நூற்றாண்டு வரையில் இருந்தவர்கள்.)
அல்பிஜென்ஸ் என்ற மார்க்கத்தினரும் (கி.பி.12 முதல் 14-ம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்தவர்கள்), ஆதி அப்போஸ்தலர் காலத்தில் திருச்சபை இருந்த நிலைக்கு அனைவரும் திரும்ப வேண்டும். தேவனுடைய பத்து கட்டளைப்படி வாழ வேண்டும் என்று போதித்த வால்தென்சியர் என்ற மார்க்கத்தினரும் (கி.பி.12 முதல் 19-ம் நூற்றாண்டு வரை இருந்தார்கள் ) மற்றும் ஷ்யூக்னாட்ஸ் லோலாட்ஸ் கூட்டத்தாரும் போப்பாதிக்கத்தால் நாடு கடத்தப்பட்டனர்.வேட்டையாடி கொல்லபட்டனர் (General Council of the Church, Catholic Publication,P77,81,82)

கான்ஸ்டைன்டின் மன்னனின் காலத்தில் (கி.பி.4-ம் நூற்றாண்டில் ) அதற்கு பின்னும் வாழ்ந்த ஆதி அப்போஸ்தல கிருஸ்தவத்தை பின்பற்றிய கிருஸ்தவர்கள் போப்புகளின் ஆதிக்க அதிகாரத்திற்கும் பயந்து பல தேசங்களுக்கு தப்பிச்சென்றனர்.பலர் இந்தியாவுக்கு வந்தனர். கேரளாவில் மலபார் பகுதியிலும் திருவிதாங்கூரிலும்,கோவாவிலும் குடியேறி அவர்களின் பழைய முறையின்படியே தேவனைமட்டும் ஆராதித்து வந்தனர். கிபி1502-ல் வாஸ்கோடகாமா வருகைக்குப் பிறகு தென் இந்தியாவிலும் கத்தோலிக்க ஆதிக்கம் காலூன்றியது. அவருடைய ஆதிக்கப் பகுதியிலும் குறிப்பாக போர்ச்சுக்கீசிய கோவாவிலும் தங்கள் மதக் கொள்கைகளுக்கு புறம்பானவர்கள் அழிக்கபட்டனர்.

கத்தோலிக்க திருச்சபையின் தேவவிரோத போக்கைக் கண்டித்து எதிர்ப்பு தெரிவித்த கிருஸ்துவ மெய் பக்தர்கள் காலம் நெடுகிலும் கொன்று குவிக்கப்பட்டனர். சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டனர்.பரிசுத்த வேதாகமம் சங்கிலியால் கட்டிவைக்கபட்டு இருந்தது. அதை வைத்திருப்போர் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டனர. போப் ஆதிக்கத்திற்கு கீழ்படியாத பெரும்பான்மையினர் தாங்கள் வசிக்கும் இடங்களில் இருந்து மனைவி பிள்ளைகளுடன் வெளியேற்றபட்டனர்.நிர்வாணமாக்கபட்டு சவுக்குகளால் அடிக்கப்பட்டனர். பலர் மிகக்கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

போப்பாதிக்கத்தின் கொடுச் செயல்களுக்கு ஆதாரத்தை கீழ்கண்ட நூல்களில் காணலாம்.

1.The Birks- The First Two Versions of Daniel, Page 258,259.
2. The History of Popes- vol.2,Page 334.
3.The History of Inquisition In Spain By Larando
4. THE History of Inquisition by Borches
5. The Western Watchman (RC) of St.Lovis.
6. Council Tolo Sarum Pope Gregory 9 Annochr–1229
7. D. Lordsch Historde la Bible En France 1910, Page 14
8. Quanta Cura Pope Fiex 9- 8.12.1686
9. The History of Romanism ,Peter. 541-542.
10. Christ and Anti Christ-Rev.Samuel &J.Cassels
11. THE History of Protestantism- Rev.J.A.Wylie,volume.1&2

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இத்தகைய இரக்கமற்ற தேவ விரோதக் கொடுங்கோல் நடவடிக்கைகளை இந்த கடைசிக் காலத்தில் திரும்பிக் பார்த்த போப் 2 ம் ஜான்பால் 12.3.2000 அன்று வாட்டிகான் புனிதப் பீட்டர் தேவாலயத்தில் திருச்சபையின் 2000வருட கொடுமைக்காக பகிரங்கப் பொது மண்ணிப்பு கேட்டார் (தினமணி 13.3.2000).

போப் இரண்டாவது ஜான் பாலின் இருதயத்திலிருந்து வெளிப்பட்ட பாவமண்ணிப்பின் காரணமாக போப் ஆதிக்க பாவவரலாறு முழுவதும் மாற்றி எழுதவில்லை. இரத்த வெறி கொண்ட பாபிலோனிய கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன் வேடத்தை மாற்றிக்கொண்டு இருக்கிறது அவ்வளவே

About Thinappuyal News