மஹிந்தவை சந்தித்த நோர்வே தூதுவர்

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை நோர்வே நாட்டின் தூதுவர் கஸ்ட்டட்சேத்தேர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு நேற்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது நோர்வே நாட்டின் உதவித்தூதுவர் ஸ்வென்ஸ்கிருவும் கலந்து கொண்டிருந்தார்.

இச் சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் எதிர்க்கட்சித்தலைவரின் தற்போதைய பணி, கொள்கைகள் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் பணி வரையறைக்குட்பட்ட சிக்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நோர்வே தூதுவருக்குமிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

About Thinappuyal News