பரு தழும்புகள் மறைய

பொதுவாக பெண்களும் சரி ஆண்களும் சரி முகத்தில் பரு வந்தாலே போதும் அதனை நகங்களினால் வைத்து கிள்ளுவது வழக்கம். இதனால் நாளாடைவில் கருமையான தழும்புகள் நமது முகத்தில் படிந்து விடுகின்றது.

இதற்கு ஓர் அற்புதமான மாஸ்க் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை எப்படி தயாரித்து யூஸ் பண்ணுவது என்பதை இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • பேக்கிங் சோடா – சிறிது
  • ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டீஸ்பூன்
  • தேன் – சிறிது
  • எலுமிச்சை – 1/2
தயாரிக்கும் முறை

ஒரு டம்ளரில் பாதி நீரை நிரப்பி, அதில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

மற்றொரு பௌலில் பேக்கிங் சோடா போட்டு, அத்துடன் கலந்து வைத்துள்ள வினிகர் நீர் சிறிது மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, அதோடு எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

முதலில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும்.

பின்பு தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி, 5-10 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இந்த மாஸ்க்கை போடுவதன் மூலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, முகப்பருக்கள் மற்றும் கருமையான தழும்புகள் நீங்கி, முகம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் இருக்கும்.

About Thinappuyal News