மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் பேரூந்துகளுக்கு எச்சரிக்கை

பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு எச்சரிக்கை ஓசைகளை (ஹோன்), வர்ணங்களைக் கொண்ட மின்குமிழ்களை ஒளிரவிட்ட வண்ணம் செல்லும் பயணிகளின் பஸ்களை முற்றுகை இடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஸ்கள் மாத்திரமின்றி இவ்வாறான ஏனைய வாகனங்களுக்கு எதிராகவும் சட்டரீதியிலான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வாகன அலுவல்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை நாடு முழுவதிலும் பிரதேச மட்டத்தில் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

About Thinappuyal News