மாவா போதைப்பொருளுடன் கைது

மாவா போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்துக்கு நீதிமன்றில் தண்டப்பணம் செலுத்திவிட்டு வந்த அன்றைய தினமே மீளவும் மாவா போதைப்பொருளை விற்பனைக்காக தயார்ப்படுத்திய நபரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு குறித்த சந்தேகநபர் சுமார் 16 கிலோ கிராம் மாவா போதைப்பொருள் பொதிகளுடன் அவரது வீட்டில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஸ் கருணாரட்னவின் கீழான சிறப்புப் பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் தனது உடைமையில் மாவா போதைப்பொருளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபர்  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம்(13) புதன்கிழமை குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவரது வீட்டை யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் சோதனையிட்ட போது விற்பனைக்குத் தயாராகப் பொதியிடப்பட்ட நிலையில் சுமார் 16 கிலோகிராம் மாவா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

About Thinappuyal News