இன்று தொடங்கும் ஐபிஎல் கான டிக்கெட் விநியோகம்

2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மார்ச் 23 ஆம் திகதி தொடங்கவிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனால் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

23ஆம் திகதி நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டிக்கான டிக்கெட் விநியோகம் இன்று தொடங்குகிறது.

300 ரூபாயில் இருந்து 6,500 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிக்கெட்டை வாங்குவதற்காக ரசிர்கள் விடிய விடிய சேப்பாக்கம் மைதானத்தில் காத்திருந்துள்ளனர்.

About Thinappuyal News