TikTok அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்ய தடை

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட TikTok அப்பிளிக்கேஷன் ஆனது இன்று உலகம் முழுவதும் பிரபல்யமாகி வருகின்றது.

இதுவரை 200 மில்லியனிற்கும் அதிகமான தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டும் உள்ளன.

இந்த அப்பிளிக்கேஷனால் பல சமூக சீர்கேடுகள் உருவாகி வருகின்றன.

இதனைக் கருத்தில்கொண்டு தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த அப்பிளிக்கேஷனை இந்தியாவில் தரவிறக்கம் செய்வதற்கு தடை விதிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

மத்திய அரசு இந்த தடையை அமல்படுத்த வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதவிர TikTok வீடியோக்களை ஒளிபரப்புவதை மீடியாக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

About Thinappuyal News