நாகார்ஜூனாவுக்கு கால்ஷீட் கொடுக்க மறுத்த நயன்தாரா

8

நடிகை நயன்தாரா நடிப்பில் ஐரா படம் அண்மையில் வெளியானது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் இருந்தும் எதிர்பார்த்த படி அமையவில்லை. வசூலும் குறைவு என்பதே நிதர்சனம்.

நயன்தாராவுக்கு அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ்க்காக காத்திருக்கின்றன. அவர் தற்போது விஜய் 63 படத்தில் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்போது தர்பார் படத்திலும் ரஜினிக்கு நடிப்பார் என சொல்லப்படுகிறது.

தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வரும் அவர் சயீரா நரசிம்ம படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்துள்ளார். இந்நிலையில் அவரை தனது Bangarraju படத்தில் ஜோடியாக நடிக்க பிரபல நடிகர் நாகார்ஜூனா அழைத்தாராம்.

ஆனால் நயன்தாரா தான் பிசியாக இருப்பதால் கால்ஷீட் கொடுக்க தேதி இல்லை என கூறிவிட்டாராம்.

SHARE