வாழைப்பூ சாம்பார் செய்வது எப்படி

தோசைக்கு அருமையான வாழைப்பூ சாம்பார்

தேவையான பொருட்கள் :

துவரம்பருப்பு – 1 கப்,
வாழைப்பூ – 1 கப்,
நறுக்கிய தக்காளி – 1,
புளி – நெல்லிக்காய் அளவு,
சின்ன வெங்காயம் – 8,
காய்ந்தமிளகாய் – 4,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
குழம்பு மிளகாய் பொடி – 2 டீஸ்பூன்,
உப்பு, தாளிக்க கடலை எண்ணெய் – தேவைக்கு,
கடுகு, கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை :

வாழைப்பூவை சுத்தம் செய்து நறுக்கி மோரில் போட்டு வைக்கவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு 2 கப் தண்ணீர், மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி 3 விசில் விடவும்.

விசில் அடங்கியதும் திறந்து தக்காளி, புளிக்கரைசல், மிளகாய் பொடி, வாழைப்பூ, உப்பு போட்டு கலந்து மீண்டும் 1 விசில் விட்டு இறக்கவும்.

பின்பு கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்த பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, குக்கரிலிருந்து சாம்பாரை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கவும்.

சூப்பரான வாழைப்பூ சாம்பார் ரெடி.

About Thinappuyal News