திரிஷாவுக்காக கதை எழுதும் ஏ.ஆர்.முருகதாஸ்

‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சரவணன் தொடர்ந்து ‘இவன் வேறமாதிரி’, ‘வலியவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின்னர் கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடித்த ‘சக்ரவியூகா’ படத்தை இயக்கினார்.
இடையே விபத்து ஏற்பட்டதால் சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் இயக்குனர் பணிக்கு திரும்பி உள்ளார். முழுக்க முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்‌ஷன் படமொன்றை இயக்கவுள்ளார்.
இதில் திரிஷா நாயகியாக நடிக்கிறார். தற்போது திரிஷாவுடன் நடிக்க உள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படம் ஆக்‌‌ஷனுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாக இருக்கிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் கதையை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் எழுத, சரவணன் இயக்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சரவணன், ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News