ஜடேஜாவின் 100 ஆவது விக்கெட்டும் தோனியின் 100 ஆவது வெற்றியும்

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் நேற்றிரவு ஜெய்ப்பூரில் இடம்பெற்ற 25 ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் பந்தில் சாண்டனர் விளாசிய ஆறு ஓட்டத்தினால் சென்னை திரில் வெற்றிபெற்றது.

இப் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடும்போது 11 ஆவது ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட ஜடேஜா 10.5 ஆவது பந்தில் ஸ்டீபன் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்தார்.

இதன்மூலம் ஐ.பி.எல். அரங்கில் 100 விக்கெட்டுக்களை பூர்த்தி செய்த முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.

அது மாத்திரமல்லாமல் ஜடேஜா நேற்றைய போட்டியின் போது நான்கு ஓவர்கள் பந்து வீசி 20 ஓட்டங்கள‍ை கொடுத்து இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதேவேளை இந்த வெற்றியின் மூலமாக சென்னை அணியின் தலைவர் தோனி ஐ.பி.எல். அரங்கில் 100 ஆவது வெற்றியை பதிவு செய்த முதல் அணித் தலைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அத்துடன் தோனி இதுவரை 182 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 4172 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், 21 அரைசதங்களையும் பூர்த்தி செய்துள்ளார்.

கொல்கத்தா அணியின் முன்னாள் தலைவர் கெளதம் கம்பீர் ஐ.பி.எல்.லில் 129 போட்டிகளில் விளையாடி 71 பேட்டிகளை வெற்றிகொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

About Thinappuyal News