மருத்துவமனையில் பீலே அனுமதி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு சிறுநீரக கற்களை அகற்றும் சத்திரசிகிச்சை செய்யப்படவுள்ளது.

பிரேசில் கால்பந்து ஜாம்பவானான 78 வயது பீலே, பிரான்ஸ் நாட்டில் நடந்த கால்பந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று இருந்தபோது திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கடந்த 2ம் திகதி அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து தனது சொந்த நாடான பிரேசிலுக்கு செவ்வாய்க்கிழமை திரும்பினார்.

சாவோ பாவ்லோ விமான நிலையம் வந்தடைந்த பீலே உடனடியாக அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் பீலேவுக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு ஏற்பட்டு உள்ளதாகவும், அதனை அகற்ற சத்திரசிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் மருத்துவமனை செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், எப்போது சத்திரசிகிச்சை செய்யப்படும் என்ற தகவலை வெளியிடவில்லை.

About Thinappuyal News