சொந்த ஊரில் பதிலடி கொடுக்குமா கொல்கத்தா?

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 26 ஆவது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதவுள்ளன.

இப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு கொல்கத்தாவில் ஆரம்பமாகவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கிடையே கடந்த 30 ஆம் திகதி டெல்லியில் இடம்பெற்ற போட்டியில் டெல்லி அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் இன்றைய தினம் தனது செந்த ஊரில் பழி தீர்க்க வேண்டும் என்ற முனைப்புடன் கொல்காத்தா களமிறங்கவுள்ளது.

சொந்த ஊரில் ஆடுவது கொல்கத்தா அணிக்கு சாதகமான அம்சமாகும். சுழற்பந்து வீச்சு, துடுப்பாட்டம் இரண்டிலும் கொல்கத்தா அணி வலுவாக உள்ளது.

6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ள கொல்கத்தா அணி, இதற்கு முதல் இடம்பெற்ற ஆட்டத்தில் சென்னைக்கு எதிராக வெறும் 108 ஓட்டங்களுக்குள் சுருண்டது. எனினும் அன்று விட்ட தவறுகளை திருத்திக் கொண்டு ஐந்தாவது வெற்றிக்காக இன்று களமிறங்குகிறது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி என்று இதுவரை 6 புள்ளி பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சாய்த்த டெல்லி கேப்பிட்டல்ன்ஸ் அணி 4 நாள் ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களிறங்க காத்துள்ளது.

பந்து வீச்சில் மிரட்டும் ரபடாவும் , துடுப்பாட்டத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, ரிஷாப் பாந்த் உள்ளிட்டோரும் நம்பிக்கை தருகிறார்கள்.

இவ்விரு அணிகளும் இதுவர‍ை 22 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 13 முறையும், டெல்லி அணி 8 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About User2