நாடளாவிய ரீதியில் 5 இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டம்

நாடளாவிய ரீதியில் சுமார் 5 இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஆரம்ப தொழில் துறை சமுக மேம்பாட்டுத்துறைஅமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டு காலத்தின் சுபவேளையில் மரக்கன்றுகளை நாட்டுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் சுமார் 5 இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல, சுகுறுபாய வளாகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..

இந்த நிகழ்ச்சி ரி.ஜே.ஐ.வகை மாமரக் கன்றுகளை பகிர்ந்தளிக்கும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 2015ம் ஆண்டில் ஏற்றுமதிப் பயிர்களுக்கான 70 இலட்சம் மரக்கன்றுகளும், 2016ம் ஆண்டில் 170 இலட்சம் மரக்கன்றுகளும், கடந்த வருடம் 250 இலட்சம் மரக்கன்றுகளும் நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்த மரக்கன்றுகள் மூலம் பெறப்படும் பயிர்கள் மற்றும் பழங்கள் ஏற்றுமதிக்காக பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் கணிசமான அளவு ஏற்றுமதி வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆரம்ப தொழில் துறை சமுக மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

About Thinappuyal News