அதிக விலைக்கு விற்றதால் ரூ 1 கோடி வரை நஷ்டத்தை சந்திக்கும் – நட்பே துணை

நட்பே துணை ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்தது. இப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது, முதல் வாரத்தில் வசூலும் நன்றாக தான் இருந்தது.

ஆனால், இப்படத்தை அதிக விலைக்கு விற்றதால் ரூ 1 கோடி வரை தமிழகத்தில் இப்படம் நஷ்டத்தை சந்திக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் குறைந்த விலைக்கு விற்ற மீசைய முறுக்கு படம் செம்ம ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

About User2