நுவரெலியாவிற்கு பிரதமர் விஜயம்

நுவரெலியாவிற்கு மூன்று நாட்கள் சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று  காலை நுவரெலியா பம்பரகலை பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்குள்ள பம்பரக்கலை ஸ்ரீ மகா விகாரையில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டு, நாட்டிற்கும் நாட்டின் மக்களுக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என பிராத்தனையில் ஈடுப்பட்டார்.

அத்தோடு, நுவரெலியா பம்பரக்கலை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறித்து விகாரையின் விகாராதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்ததையடுத்து, இதனை கவனத்திற்கொண்ட பிரதமர், இதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விகாராதிபதி மீபனாவே சுகந்தநந்த தலைமையில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வில், நுவரெலியா மாநகர சபை மேயர் சந்தனலால் கருணாரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

About User2